சாப்பிட உட்கார்ந்தேன்
என்னவள் பரிமாறினாள்
வழக்கத்திற்கு மாறாக
தயிர் சாதம் பரிமாறினாள்
புருவத்தை கேள்விக்கணையாக்கினேன்
கேள்வியைப் புரிந்து கொண்டவள்
'தயிரை சேர்த்துக் கொண்டால்
இதய நோய் வராதாம்...
ஆதலால் தயிரை
சேர்த்துக் கொள்ளுங்கள்'
என்றாள் வாஞ்சையாக...
மெல்லச் சிரித்து
மெல்லியாளிடம்
'எனக்கிது தேவையில்லை
என்னிடம் இதயமே இல்லை' என்றேன்
'உங்கள் இதயம்
உங்களிடம் இல்லை என்பது
எனக்குத் தெரியும்!
என் இதயம் உங்களிடத்திலிருக்கிறதே
ஆதலால்தான் சொன்னேன்
அதிகம் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள்' என்றாள்!