Friday, July 18, 2014

தாயின் மடி!



காதைப் பிளக்கும்
பீரங்கி குண்டுச் சத்தம்…
ஒற்றையாய் விழுந்து
கற்றையாய் உயிர்களைக் கொல்லும்
கொத்துக் குண்டுகள்…
உயிரினை உரசிச் செல்லும்
எமகாதக தோட்டாக்கள்…
என அத்தனை எமன்களையும் தாண்டி
நாட்டைக் காக்க முன்னேறுகிறேன்
எதிரில்படும் எதிரிகளை
துவம்சம் செய்தபடி…
எங்கிருந்தோ வந்த குண்டு
என் இதயத்தைத் தாக்க
இரத்தத்தை இறைத்தபடி
தாய் மண்ணில் மடிகிறேன்
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு...
அது தாய் மண் என்பதால் அல்ல
அது நான் பிறந்த தாயின் மடி என்பதால்..!

(தாய்மண்ணைக் காக்க போராடி வீரமரணமடைந்த தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்)