Friday, October 30, 2009

நூறு மில்லி..!



மறந்தும் கூட பெரிய வார்த்தை
பேசாத அப்பா..!
அன்புடன் அரவணைப்பதில்
அன்னைக்கு
நிகரான தந்தை..!
கேட்டவுடன் அள்ளித் தருவதில்
புராண காலக் கர்ணனை விஞ்சிய
நிகழ்கால வள்ளல்..!
அப்பப்பா... என் அப்பாவிடம்
எவ்வளவு நற்குணங்கள்..!
அத்தனையும் தவிடு பொடியானது
அவரடித்த நூறு மில்லியால்..!

2 comments:

  1. அன்புத் தோழர் மிர்த்தன் பிரபு அவர்களுக்கு...

    தங்களின் வருகையும், பாராட்டும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது...

    தங்களின் இணைப்பு... ஈடில்லா இன்பத்தைத் தருகிறது...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...