Wednesday, February 17, 2010

உன்னை நினைத்தாலே போதும்..!


உன்னை நினைத்தாலே போதும்
என் பேனாவிற்கு…
உடனே அது காகிதத்தை
முத்தமிடத் தொடங்குகிறது..!
உனைப் பற்றி
கவிதையாய் வடிப்பதற்கு..!
உன்னை நான் நேரில்
சந்தித்தால் போதும்…
உடனே உன் செவ்விதழில்
முத்தமிடத் தோன்றுகிறது…
உன்னைப் போன்றதொரு
அழகான கவிதையைப் படைப்பதற்கு..!

8 comments:

  1. வாசித்தோம் மகிழ்ச்சி

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. அட கவிதையும் நல்லாயிருக்கு... தமிழ்க்கவிதைகள் தள மாற்றமும் நல்லாயிருக்கு... ஆமா அது யாரு...? வீட்டுல தெரியுமா?

    ReplyDelete
  4. அன்பு நண்பர் சங்கருக்கு

    தங்களின் வருகைக்கும்... வாசிப்பிற்கும் மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. அன்பு நண்பர் கமலேஷ்

    தங்களின் அன்பான வருகைக்கும்... அழகான வாழ்த்திற்கும் மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. அன்பு நண்பர் குமார் அவர்களே

    தங்களின் வருகைக்கும்... வாசிப்பிற்கும் மிக்க நன்றி...

    வீட்டுக்கெல்லாம் தெரியாதுதான்... சொல்லிப்புடாதிங்க..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. நல்லா ரசிச்சி எழுதி இருக்கீங்க மோகனன்..

    ReplyDelete
  8. மிக்க நன்றி தோழி...

    எல்லா வாழ்த்தும் என் அன்பான யாழினிக்குத்தான் பொருந்தும் தோழி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...