Saturday, March 20, 2010

என் தமிழின் மூன்றினமும்..!


நீ சேலை கட்டியிருந்தபோது
உன்னுடைய அழகான
இடையினத்தைக் கண்டு ரசித்தேன்..!
அதைக் கண்ட நீயோ
சட்டென்று உன் இடையினத்தை
மறைத்தது மட்டுமின்றி
உன் இயல்பான மெல்லினத்தையும்
மறைத்து விட்டு
வல்லினத்தைக் காட்டுகிறாய்..!
இப்படி என் தமிழின்
மூன்றினமும் உன்னிடம்
மொத்தமாய் இருக்கும் போது
ஓரினத்தை மட்டும்
நான் பார்த்து ரசித்தது
தவறுதான் பெண்ணே..!

4 comments:

  1. நல்லா ரசிக்கிறீங்க! பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழரே...

    என்னை இப்படி ரசிக்க வைப்பவளும்.. அதை கிறுக்க வைப்பவளும்... என் மனதிலிருப்பவளும்.. யாழினி எனும் தேவதையாவாள்...

    அவளுக்கே பாராட்டுக்கள் அனைத்தும் உரித்ததாகும்...

    மிக்க நன்றி தோழரே... அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. இந்த..இந்த..இந்த ஆண்கள் இருக்கிறார்களே!!
    இடையினம் மட்டுமா ரசிக்கிறார்கள்!!??......

    கவனம் மோகனன் கண்டபடி திட்டி விடுவார்கள்
    அது காதலியாய் இருந்தாலும் ...அத்து மீறலை
    யார்தான் அனுமதிப்பார்.

    உங்களவளின் கவிதை நன்று.

    ReplyDelete
  4. வாங்க தோழி..!

    என்னவள் நடந்து வரும்போது, அவள் நடையழகைப் பற்றித்தான், இடையினமெனக் குறிப்பிட்டிருந்தேன்...

    அதைப் பார்த்த என்னவளும் எனை முறைப்பதாகவும், நான் மன்னிப்பு கோருவதாகவும் சொல்லி விட்டேனே தோழி..!

    என்னவள் ஒரு அழகுக் கவிதை எனும் போது... என்னவளின் கவிதைக்கு கேடகவா வேண்டும்...

    தங்களின் கனிவான கண்டிப்பிற்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி..!


    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...