Wednesday, March 24, 2010

உன்னை கண்ட பின்புதான்..!


எப்படித்தான் என்னுள் உற்சாகம்
ஊற்றெடுக்கிறது
என்பது தெரியாமல்
தினமும் தவித்துக் கொண்டிருந்தேன்..!
உன்னை கண்ட பின்புதான்
தெரிந்து கொண்டேன்…
என்னுள் எப்படி
ஊற்றெடுக்கிறதென்று..!

8 comments:

  1. வாங்க தோழரே...

    தங்களின் வருகைக்கும், தங்களின் மேலான வாசிப்பிற்கும்... அட்டகாசமான பின்னுட்டத்திற்கும் அடியவனின் அன்பு கலந்த நன்றிகள் பற்பல...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  2. உற்சாகம் உன்னால்
    ஊற்றெடுக்கிறதென்று\\\\\\

    இப்ப... காதல் இப்படித்தான்
    ஊற்றெடுக்கும் ,
    கல்யாணம் ஆன பின்பும்.
    ஊற்றெடுக்க வேண்டுமே!?

    ஏனோ சில ஆண்களிடம்
    அது {திருமணத்துக்குப் பின்}
    அடியோடு வற்றி விடுவதேன்?

    எனக்கொரு பாட்டு ஞாபகம் வருகிறது..
    ஆண்கள் மனமே அப்படித்தான்
    அது
    அடிக்கடி மாறும் இப்படித்தான்....
    மோகனன் உங்களைச் சுட்ட வில்லை
    அப்படி நடக்கும் உங்கள் வர்கத்துக்காக.....
    நன்றி

    ReplyDelete
  3. அன்பான தோழிக்கு...

    தங்களின் வாதம் நியாயமானதுதான்... மறுக்கவில்லை... என் அனுபவத்தில் ஆண் வர்க்கம் மட்டுமல்ல, இப்போதெல்லாம் இதே வேலையை பெண் வர்க்கமும் செய்கிறது...

    எந்த இணையிடம் கடைசி வரை அன்பு குறையாமல், காதல் குறையாமல் இருக்கிறதோ... அவர்கள் இறக்கும் வரை அவர்களிருவரிடத்தும் உற்சாகம் ஊற்றெடுத்துக் கொண்டேதான் இருக்கும்..!

    நான் அன்பு குறையாத வர்க்கத்தைச் சேர்ந்ந்தவன்... என் ஆயுள் முடியிம் வரை அப்படித்தான் இருப்பேன் தோழி..!

    தங்களின் வருகைக்கும், ஆதங்கத்திற்கும் எனது ஆத்மார்த்த நன்றிகள்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. மிக்க நன்றி தோழரே..!


    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. கவிதையில் காதல் ஊற்று உள்ளது. காதல் உற்சாகமாய் வந்துள்ளக் கவிதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நன்றி சரவணன் அவர்களே..!

    என்னவளின் அன்பும்... உங்களைப் போன்ற ரசிகர்களின் ஆதரவும்... இருந்தால் இந்த கவி ஊற்று ஆறாய்ப் பெருகும்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...