Monday, April 5, 2010

இதழ்கள் என்றாலே..!


இதழ்கள் என்றாலே
எனக்கு என்றுமே
புத்துணர்ச்சிதான்..!
எழுத்துக்களைப் படிக்கத் தரும்
இதழ்களானாலும் சரி..!
அந்த எழுத்துக்களைப்
படித்துத் தரும்
உன் இதழ்களானாலும் சரி..!

4 comments:

  1. என்னங்க...

    இது ரொம்ப குறும்பான கவிதைங்க...

    ReplyDelete
  2. அப்படிங்களா யாழினி...

    அப்ப எனக்கு நிரம்ப சந்தோஷம்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. இதழ் “கள்”

    ஐய்யய்யோ மோகனன் ரொம்பத்
    தடுமாற்றத்தில்!! போதை தலைக்கேறி
    விட்டது போலும் ...

    போதை தருமென்று தெரியாதா?
    அதிகமாகப் பருகி விட்டீர்கள் போலும்,

    நாள் “இதழ்கள்” ஒவ்வொரு நாளும்
    படிப்பதாலா!?...

    நங்கையின் சிவப்பிதழ்கள்
    மலர்ந்த ரோசாவாய்...வண்டின்
    வரவுக்கு!! அழகான படம்
    அதிலும்.......!!!???? வரிகள்
    பிரமாதம் நன்றி,

    நான் போட்ட குறிகளுக்கு.....
    அர்தம் ம்ம்ம்ம்மம....முயற்சியுங்கள்
    சொல்ல.....மாட்டேன்

    ReplyDelete
  4. தங்கள் கருத்துக்'கள்'ளும்... நீங்களிட்ட குறி'கள்'ளும்... அடியவன் புரிந்து கொண்டேன்...

    தாங்களும்... புகுந்து விளையாடுகிறீர்'கள்' கலா..!

    அடிக்கடி சுவாசிக்க வாருங்'கள்'

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...