Thursday, April 22, 2010

தொலைத்த பின்னும் நிம்மதி..!


யாரேனும் தனக்குரிய
பொருளைத் தொலைத்து விட்டால்
நிம்மதியாய் உறங்குவார்களா..?
ஆனால் நான் உறங்குகிறேன்..!
என் மனதை தொலைத்து
விட்ட பின்பும்
நிம்மதியாய் உறங்குகிறேன்..!
ஏனெனில்…
என் மனதை
உன்னிடம்தான்  - அதுவும்
உரியவளிடம்தான்
தொலைத்திருக்கிறேன்
எனும் மன நிம்மதியோடு..!

7 comments:

  1. நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  2. மிகவும் நன்றி நண்பரே..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. மிகவும் அழகான சிந்தனை
    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் மீண்டும் வருவேன் .

    ReplyDelete
  4. வாங்க சங்கர்..!

    தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் மிகவும் நன்றி..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. அழகான வரிகள் ..ஆழமான உணர்வுகள் ..
    வாழ்த்துகள்

    ReplyDelete
  6. மிகவும் நன்றி சுதாகர் குமார்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. தலைவன் குழுமத்திற்கு மிகவும் நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...