Tuesday, April 27, 2010

சந்தித்துக் கொள்ளும் போது..?


உன்னை சந்திக்கும் போது
நிறைய பேச வேண்டும்
என்ற நினைப்போடு
உனை சந்திக்க வருவேன்..!
நானும் உன்னுடன்
நிறைய பேசவேண்டுமடா
என்றபடி நீயும் வருவாய்..!
நாமிருவரும்
சந்தித்துக் கொள்ளும் போது
நாம்மால் வாய் திறந்து
பேச முடிவதில்லை..!
உனை உன் வெட்கம்
பேச விடாமல் செய்து விட…
எனை உன்னழகு
பேச விடாமல் செய்து விட்டதடி…
நான் என்ன செய்வேன்..!

2 comments:

  1. ஓ இருவர் சந்திக்கும் போது......
    இவ்வளவு பிரச்சனைகள்
    உண்டா??


    நானும் உன்னுடன்
    நிறைய பேசவேண்டு “மடா”
    வெட்கப்படும் பெண்... {ஆண்மகனை}
    டா போட்டுப் பேசுவாளா!?



    என்றபடி நீயும் வருவாய்\\\

    ReplyDelete
  2. ஆம் தோழி...

    அதை பிரச்சினை என்பதை விட, சொல்ல முடியாத அளவிற்கு இன்ப வேதனை எனலாம்...

    அவள் வெட்கப்படும் போதுதான்... அந்த'டா...'வே பேச வரும் காதலில் அது ஒரு தனி சுகம்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...