Wednesday, June 16, 2010

நீயோ நாற்பத்தைந்து கிலோ..?

'நீயோ நாற்பத்தைந்து கிலோ...
நானோ எழுபத்தைந்து கிலோ...
எப்படியடி என் எடையை
நீ தாங்குவாய் ..?' என்றதற்கு
'என் இதயம் எவ்வளவு
எடை இருக்குமென்று சொல்..?
என்று என்னிடமே
எதிர்க்கேள்வி கேட்டாய்..!
அதற்கு நானோ...
'முன்னூறு கிராம்' இருக்குமென்றேன்
'ம்ம்ம்... முன்னூறு கிராம்
எடையுள்ள என் இதயத்தில்
எழுபத்தைந்து கிலோ உள்ள
உன்னையே சுமக்கிறேனென்றால்...
நாற்பத்தைந்து கிலோ உள்ள
நான் உன்னை சுமக்க
மாட்டேனா என்ன..?'
என்று உன் அழகிய
அதரவாயிதழ் திறந்து
என்னையே அசரவைத்துவிட்டாயடி..!

12 comments:

  1. உங்கள் கிலோக் கவிதையின்
    பாரம் அபாரம். மோகனன்

    ReplyDelete
  2. கவிதை கணக்கிறது. ஓவர் வெயிட். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அன்பின் மோகனன்

    புத்திசாலிக் காதலி - மடக்கி விட்டாரே !

    நன்று நன்று

    நல்வாழ்த்துகள் மோகனன்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  4. அன்பு நிறை தோழிக்கு...

    தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. //கவிதை கணக்கிறது. ஓவர் வெயிட். வாழ்த்துக்கள்.//

    (கணக்கிறது அல்ல... கனக்கிறது...)

    அன்புத் தோழர் சரவணன் அவர்களே ...

    தாங்கள் என் கவிதையின் பாலிட்ட கனமான கருத்துரைக்கு மிக்க நன்றி..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. அன்புத் தோழர் சீனா அவர்களே ...

    எம்மை விட எம் காதலியாள் புத்திசாலியாக இருப்பதையே நான் விரும்புகிறேன்... அதையேதான் அனைத்து காதலர்களும் விரும்புவார்கள்...

    தாங்கள் என் கவிதையின் மேலிட்ட கருத்துரைக்கு மிக்க நன்றி..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. Your poet's are so nice! I am learner of tamil, but I can able to understand your poem.

    ReplyDelete
  8. நன்றி...

    எனக்கு மின்னஞ்சலிடுங்கள்... நான் விளக்குகிறேன்...

    plz contact my mail id: moganan@gmail.com

    i will explain u..!

    ReplyDelete
  9. You are so cute mohan.. I like you and your poems!!

    ReplyDelete
  10. Hi Mohan,

    Why you are writing this kinds of poems? Are u a mad? not have any sense? Your all poems are teasing girls only.. Dont do like this mohan.

    Regards,
    Ragavi.

    ReplyDelete
  11. Mohan, nan unga profile aha parthen, oru tamil flim kooda ungaluku pidikaadha? Neenga tamil naatula thana pirandheenga? illa america va? black american are you? First you give respect to tamil flims and tamilan's, then you can write poems in tamil. ok!!!


    [Pin Kuripu : Nan tamil naatula than pirandhen aanal, en computeril tamil font illa, idhai en koorukiren enral neengal edhayum kindalaga pesuveergal]

    ReplyDelete
  12. Your are a great poet...

    Regards Renuka......

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...