Monday, June 21, 2010

அசராமல் எப்படியடி..?


கொஞ்சம் சிரிப்பு…
கொஞ்சம் தவிப்பு…
கொஞ்சம் மோகம்…
கொஞ்சம் தாகம்…
கொஞ்சம் செல்ல முறைப்பு…
கொஞ்சம் பொய்க் கோபம் என
அத்தனை பார்வைகளையும்
மொத்தமாய்க் கலந்து
உன் மேல் நான் வீசினால்..?
அத்தனையும் வாங்கிக் கொண்டு
அசராமல் எப்படியடி
அழகாய் அமர்ந்திருக்கிறாய்..!
இன்று நீ…
மொளன விரதமா என்ன..?

4 comments:

  1. நன்றி தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  2. “கொஞ்சம்” கேட்டுக் கெஞ்சிலால்...
    பாவம் அவர்கள் என்னதான்
    செய்யமுடியும்!
    புத்தியுள்ளவர் சமத்தாய்த்
    தப்பிவிட்டார்

    நீங்கள் தான் ஏமாறியது
    ஜய்யோ..பாவம்

    கொஞ்சம் அதிகம்தான்
    .................
    நன்றி மோகனன்

    ReplyDelete
  3. வாங்க கலா....

    வஞ்சியிடம் கொஞ்சிக் கேட்கவில்லை.. கொஞ்சம்தான் கேட்டேன்...

    ம்... பெண்ணின் மனதை பெண்தான் அறிவார் போல...

    மிக்க நன்றி தோழி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...