Saturday, August 7, 2010

கொலுசுச் சத்தங்களை..!

கொலுசுச் சத்தங்களைக்
கேட்கும் போதெல்லாம் நீதான்
வந்துவிட்டாயோ என
ஆவலோடு திரும்பிப் பார்க்கிறேன்..?
அப்படி திரும்பித் திரும்பிப்
பார்த்ததில் என் கழுத்து
வலிக்கிறதோ இல்லையோ..?
நீ இன்னும் வரவில்லை என்பதால்
என் மனசு வலிக்கிறது..!

4 comments:

  1. நன்றி தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  2. அப்படி திரும்பித் திரும்பிப்
    பார்த்ததில் என் கழுத்து
    வலிக்கிறதோ இல்லையோ\\\


    நீ இன்னும் வரவில்லை
    என்பதால்
    என் மனசு வலிக்கிறது..!\\\\\\

    ஆமா, நின்று,நின்று கால் வலிக்கும்...
    பார்த்துப்,பார்த்துக் கண்வலிக்கும்....
    இதெல்லாம் காதல் செய்யும் வரைதான்
    நண்பரே!

    அப்புறம் ..???? தான்!!

    ReplyDelete
  3. வாங்க கலா...

    எங்க காணோம்னு பார்த்தேன்... அதான நீங்களாவது... வராம இருப்பதாவது..?

    இந்த காத்திருப்பு திருமணத்திற்குப் பின்பும் தொடரத்தான் செய்கிறது..

    அதற்கு முன்னதாக ஓன்றை தெரிந்து கொள்ளுங்கள்... காதலிக்கும் போது இருவரும் சந்துக்கொள்ளும் நேரம் மிகக் குறைவு...

    யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள்... ஆதலால் தனியே காத்திருப்பார்கள்...

    திருமணத்திற்குப் பிறகு... இருவரும் இணைந்தே வாழ்கிறார்கள்.. இங்கு காத்திருப்பு எங்கிருந்து வரும்.. (சில நேரங்களைத் தவிர..)

    உணர்ந்து பேசுங்க கலா..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...