Thursday, August 19, 2010

மறந்து போதல்..!

உன் கூந்தல் வாசம்
பிடித்ததால்…
என் சுவாசத்தை நானும்
மறந்து போனேன்..!
உன் இதழில்
கவிதையைப் படித்ததால்...
என் கவிதையை நானும்
மறந்து போனேன்..!
என் உயிராய் நீயும்
ஆனதினால்...
என் உறவுகளை நானும்
மறந்து போனேன்..!

8 comments:

  1. இப்ப யாராச்சும் நினைவில் இருக்காங்களா பாஸ்...

    ReplyDelete
  2. என் உயிராய் நீயும்
    ஆனதினால்...
    என் உறவுகளை நானும்
    மறந்து போனேன்..!\\\\\\\

    இது எந்த விதத்தில் நிஞாயம்?

    இதைத்தான் கண்மூடித்தனமான
    காதல் என்கிறதோ?

    உங்கள் பெயராவது ஞாபகம் இருக்கின்றதா
    மறதிக்காரரே!!

    ReplyDelete
  3. ம்ம்... நினைவில் இருக்காங்க... தோழரே..!

    அவங்க யாருன்னா..? யாருன்னா..? யாருன்னா..? யாருன்னா..?

    அட மறந்துட்டேங்க..! (என் அம்முவைத் தவிர...)

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க தோழரே..!

    ReplyDelete
  4. வாங்க கலா..!

    என் கண்ணுக்குள் அவள் நிறைந்து விட்டதால்... அவளைத் தவிர அத்துனையும் மறந்து போய் விடுகிறது நான் என்ன செய்ய..!

    (கண் மூடினாலும், திறந்தாலும் அவள் நினைவுதான் என்பதால்.. எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம்..!)

    ஆங் என் பெயர் யாழினி மணாளன்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. கவிதை நல்லாயிருக்கு நண்பா.

    ReplyDelete
  6. மிக்க நன்றி நண்பா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. NEENGA LOVE PANNIRUKKINGA NU NALLA THERIUTHU..., LOVE SUCCESS THANA....

    ReplyDelete
  8. நான் சாகும் வரை காதலிச்சுகிட்டேதான் இருப்பேன்... இதுல சக்ஸஸா, இல்லையான்னு கேக்கறதுக்கு இடமே இல்லீங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...