Monday, November 22, 2010

காத்துக் கொண்டிருக்கிறேன்..!

அன்பே..!
நீ இருக்கும் ஊர்...
எனக்கு கோவிலானது..!
நீ இருக்கும் திசை...
எனக்கு சூரியன் உதிக்கும்
திசையானது..!
நீ வரும் பேருந்து...
எனக்கு திருவிழா தேரானது..!
கடவுளின் தரிசனத்திற்கு
காத்திருக்கும் பக்தனைப் போல்
உன் தரிசனத்திற்காகக்
காத்துக் கொண்டிருக்கிறேன்..!
சீக்கிரம் வந்து எனக்கு
காதல் அருள் பாலிப்பாயா..?

12 comments:

  1. Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


    www.ellameytamil.com

    ReplyDelete
  2. தகவலிற்கு நன்றி தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. வழமைபோல் சுப்பர்

    ReplyDelete
  4. மனம் திறந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி யாதவன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. //காத்திருக்கும் பக்தனைப் போல்
    உன் தரிசனத்திற்காகக்
    காத்துக் கொண்டிருக்கிறேன்..!//
    அருமை :)

    ReplyDelete
  6. அன்பு நிறை தோழி இந்துவிற்கு...

    ஒரு கவிதையே என் கவிதையை ரசிக்கிறது என்றால்... இதற்கு மேல் என்ன சொல்ல...

    வருகைக்கும்... வாசிப்பிற்கும்... கருத்துரைக்கும் இனிய நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. நண்பா...
    கவிதை அருமை என்று சொல்லி விட்டு செல்ல எனோ மனமில்லை. காதல் கவிதைகளை எழுதுவதில் நீ சிறப்பானவன் என்பதை நானறிவேன். இந்தக் கவிதையெல்லாம் எல்லாரும் யோசிப்பது... இன்னும் பரிட்சையப்பட்டு அழகாய் எழுது.. எனக்கு உனது சில கவிதைகள் ஒரே சாயலில் வருவது போல் தெரிகிறது... இன்னும் நன்றாக எழுது...

    மனதில் பட்டதை சொல்லி உள்ளேன். ஒரே மாதிரியான கவிதைகளை தவிர்க்க முயற்சி செய்.

    ReplyDelete
  8. நீ சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது தோழா...

    பணிப்பளு அதிகமாக இருக்கிறது.. இதை சரியாக கவனிக்க முடிவதில்லை...

    இனி கவனமாக பதிவிலிடுகிறேன்... உன்னுடைய மனம் திறந்த விமர்சனத்திற்கு எனது அன்பான நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  9. நிச்சயம் இனி தினந்தோறும் சுவாசிக்க வருவேன் தோழரே :)

    ReplyDelete
  10. நன்றி நவில்கிறேன் தோழி..

    தங்கள் வரவு நல்வரவாகட்டும்...

    ReplyDelete
  11. ஐயா எனக்கு தமிழ்லில் இலக்கியங்கள் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது கற்று தருவீர்களா

    ReplyDelete
  12. தமிழை சுவாசிக்க மட்டுமே தெரியும் எனக்கு...

    நான் சுவாசித்திவரை உங்களுக்கு சொல்லித் தருகிறேன்...

    தமிழ் என்பது மிகப்பெரிய சமுத்திரம்... அதில் நான் சிறுமணற்துகள் கூட கிடையாது...

    நிறைய படியுங்கள்... தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பிடித்து படியுங்கள்... படிக்கப் படிக்க தமிழ் தெளிவுறும்...

    வருகைக்கு நன்றி... அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...