Tuesday, April 12, 2011

எல்லோர்க்கும் எல்லாமும்..! - தமிழ்ப்புத்தாண்டு தின சிறப்புக் கவிதை!




சூரியனை அணைக்கத்தான் முடியுமா?
நிலவினை மறைக்கத்தான் முடியுமா?
நட்சத்திரங்களை ஒழிக்கத்தான் முடியுமா?
அதுபோல் தான் தமிழ்ப்பெண்ணே
உன் பிறப்பை மாற்றத்தான் முடியுமா?
சித்திரை மாதத்தில் பிறக்கும் என்
பத்தரை மாற்றுத் தமிழ் தங்கமே...
உன் வரவை யார் தடுப்பார்..?
உலகத்து தமிழர்க்கெல்லாம் 
திருநாளது... பெருநாளது... புதுநாளது...
எதுவெனில் எம்தமிழே 
நீ பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டு நாளதுதான்..!
எல்லோர்க்கும் எல்லாமும் அருள்வாய் தாயே..!
எளியோர்க்கு வலிமைதனை வழங்குவாய் நீயே..!
தரணியிலே தமிழர்களை தழைக்கச் செய் தாயே..!
வறுமைதனை அடியோடு அகற்றிடுவாய் நீயே..!
உன்மடியில் எப்போதும் நான் பிறக்க வரமருள்வாயே..!
என் தாயே... தமிழே... உன் திருத்தாழ் சரணம்..!

(அன்பிற்கினிய வாசக நண்பர்கள் அனைவருக்கும், எனது முன்கூட்டிய இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!


வாழ்த்தும் அன்பு நெஞ்சம்


உங்கள்
மோகனன்)

12 comments:

  1. கவிதை அருமை..
    சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. வலைச்சரத்திழல் அறிமுக மானதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
    பார்க்கவும்: வியாழன் கவிதைகள் சரமாக

    ReplyDelete
  4. நன்றி மோகனன்...

    தங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    - ஜோதி

    ReplyDelete
  5. Ungalin Kavithaiku inaiyaga veru ethuvum irukavum mudiyathu......

    Wish you happy Tamil new year, Mohanan Sir


    By Bhuvana.

    ReplyDelete
  6. அன்புக் கடலுமாய்...
    நட்பு நதியுமாய்...
    சங்கமித்த துறை முகமே!
    தமிழ்வணக்கம்.

    தமிழ்ப்புத்தாண்டு பிறக்கட்டும்
    மறக்கட்டும் கசபானவைகளை
    இனிக் கட்டும் இச் சித்திரையில்

    தமிழால்...
    தமிழ் உள்ளங்களில்
    நிறைந்த நான்..
    என் தமிழ் மனத் தோட்டத்தில்
    கொய்த மலர்கொண்டு
    பூச்செண்டு செய்து
    உங்களைத் தேடியோடி
    புறப்பட்டு வருகிறேன் “தமிழ்ச்சித்திரைப்புத்தாண்டுடன்”
    சேர்ந்தே கொண்டாடுவோம்.

    வாழ்வோம் வளமுடனும்...தமிழுடனும்

    என்றென்றும்....
    அன்பும்...
    கனிவும்...
    கனத்துக்கிடக்கும் இதயத்துடன்......

    கலா.

    ReplyDelete
  7. நண்பர் பாட்டு ரசிகனுக்கு...

    வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  8. நண்பர் சௌந்தருக்கு...

    வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  9. நண்பர் பிரகாஷிற்க்கு...

    தங்களின் வருகைக்கும் , என்னை வலைச்சரத்தில் அறிமுக்ப படுத்தியமைக்கும், வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  10. அன்பான ஜோதிக்கு...

    வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  11. அன்பான புவனாவிற்க்கு...

    தாங்கள் என் மேல் கொண்டுள்ள அன்பிற்கு மிக்க நன்றி... தமிழ்க் கவிதைக் கடலில், நான் சிறு துரும்பு...


    வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  12. அன்பான கலாவிற்க்கு...

    நான் துறைமுகமென்றால்.. நீங்கள் கலம்... உங்களுக்கு தமிழ் தரும் என்றென்றும் அடைக்கலம்...

    வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...