Wednesday, July 27, 2011

பிரிவு எனும் மூன்றெழுத்து..!



காதல் என்ற மூன்றெழுத்தின்
மந்திரமே அதில் பின்னியிருக்கும்
அன்பு எனும் மூன்றெழுத்துதான்..!

அதிலே பிரிவு எனும் மூன்றெழுத்து வரின்
தேகம் எனும் மூன்றெழுத்தில்
சோகம் எனும் மூன்றெழுத்து ஏறிவிடும்..!

மனம் எனும் மூன்றெழுத்து
ரணம் எனும் மூன்றெழுத்தில் மூழ்கி
குணம் காணா கூடாகி விடும்..!

பிரிவென்னும் மூன்றெழுத்து இனி எதற்கு...
இணைவு என்ற மூன்றெழுத்தில்
இணை பிரியாமலிருப்போம் தேவி..!

6 comments:

  1. பிரிவு: வாட்டிவதைப்பதும்,வலிகொடுப்பதுந்தான் இதன் வேலை ...
    பிரிவில் பரிவு ம்ம்ம்ம்ம...

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்தியமைக்கும ஃமிக்க நன்றி சௌந்தர்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. ஆமாம் கலா...

    அதை ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு சூழலில் உணர்கிறான்...

    வருகைக்கு நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. your's all kavithai is very nice.

    particularly this pirivu ennum munrezhthu...

    by
    Tamizh

    ReplyDelete
  5. ரசித்தமைக்கும், வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி தோழி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...