பொட்டிட்ட புதுப்பானையில்
பொங்குகின்ற பொங்கல் போல்
தங்க மனம் கொண்ட
தமிழர்களின் வாழ்விலும்
தமிழ் நகை பொங்கட்டும்..!
பொன்னான புதுப்பானையில்
பொங்கி வரும் வெண்நுரை போல்
வெள்ளை மனம் கொண்ட
வெள்ளந்தி தமிழர்களின் வாழ்வில்
வெற்றிகள் குவியட்டும்..!
சூரியனார்க்கு நன்றி சொல்லும்
சுந்தரமான பொங்கல் பொல்
சூதில்லா மனம் கொண்ட
சுத்தமான தமிழர்களின் வாழ்வில்
சுகவாழ்வு பெருகட்டும்..!
தரணியை தழைக்கச் செய்யும்
தைமகள் பிறப்பிற்கும்
எருதின் உழைப்பிற்கும் நன்றி சொல்லும்
நல்மனம் கொண்ட தமிழர்களின் வாழ்வில்
நலம் பல திரளட்டும்...
நன்மைகளே விளையட்டும்..!
புலம் பெயர்ந்த தமிழருக்கும்
புலம் பெயரா தமிழருக்கும்
பொங்கலோ பொங்கல்
பொங்குக தமிழ்ப் பொங்கல்..!
பொங்குக எங்கும் மகிழ்ச்சிப் பொங்கல்..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எனது அன்பு நண்பர்களாகிய உங்களனைவருக்கும் எனது இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!
என்றென்றும் அன்புடன்
மோகனன்.
Nalla eluthirukinga Ganesh
ReplyDeleteSuper ..............
Wish you Happy Pongal in ur family
Agilan, Athithan Uma Madam ellarukum enoda enoda wishes
nantri, ungal kavithai sarkarai, athuthan pongal
ReplyDeleteanbudan sureshkumar
அன்பான புவனாவிற்கு...
ReplyDeleteவந்து கவியை ரசித்து வாழ்த்தியமைக்கும், பொங்கல்
வாழ்த்திற்கும் எனது நன்றிகள்...
இதே வாழ்த்து தங்களுக்கும் உரித்ததாகட்டும்...
தங்களின் ரசனையான வாழ்த்திற்கு
ReplyDeleteநன்றி சுரேஷ்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
கவிதை சிறப்பாக உள்ளது!!
ReplyDelete"புலம் பெயர்ந்த தமிழருக்கும்
ReplyDeleteபுலம் பெயரா தமிழருக்கும்" எல்லோரையும் நினைக்கும் உங்கள் மனதைப் பார்த்து மகிழ்கிறேன். வாழ்த்துக்கள்
நந்தலாலாவிற்கு எனது நன்றிகள்...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க...
வியபதிக்கு எனது நன்றிகள்
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..
SUPER
ReplyDeleteஐயா எனக்கு வாழ்த்து மடல் வேண்டும் ஐயா சரண்யா முத்துகுமார்
ReplyDelete