Tuesday, June 4, 2013

அன்பால் அணைக்கும் அகிலா..! - பிறந்தநாள் கவிதை


ஒரு மகவு போதுமென தந்தை யான்
   உன்னத முடிவெடுத்திருந்தேன் - உன் தாயோ
மற்றொரு மகவு எனக்கு வேண்டுமென
  சன்னதம் செய்து உனைப் பெற்றெடுத்தாள்
முதல் மகவின் துணைக்குத் துணையாக
  இணைக்கு இணையாக உனை ஈன்றெடுத்தாள்

மருந்தென உனை நினைத்து வாழ்வில்
   வேண்டாமென நினைத்திருந்தேன்
விருந்தென வந்து விழுந்தாய் - மடியில்
  விழுதெனப் பற்றி விட்டாய் அகிலா..!
குறுகுறு மழலைப் பார்வைகள் மறைந்து
  துறு துறு  பருவத்தை  எட்டி விட்டாய்

மரணத்தை அலற வைத்து இம்மண்ணில்
  மழலையென நீ மலர்ந்தாய் - பிறந்த பின்
காலனைக் கதற  வைத்து  இக்கலி
  யுகத்தில் கம்பீரமாய் கால் பதித்தாய்!
அன்று நடந்த நிகழ்வுகள் எல்லாம்

கதிர் கண்ட பனிபோல் மறைந்து போயின!

இன்றோடு நீ பிறந்து ஆண்டு ஐந்து ஆயிற்று
  உனைப் பிடித்த துன்பங்கள் காற்றோடு போயிற்று
அகிலத்தை அன்பால் அணைக்கும் அகிலா 
    இனி இன்பங்கள் உனை விட்டு அகலா..
வான்முகிலும் இனி உன் பிறப்பை பாடும்
  வரலாறும் தன் ஏட்டில் உன் புகழைச் சூடும்!



(எனது இளைய மகனின் ஐந்தாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )

16 comments:

  1. செல்லத்திற்கு எனது அன்பான வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. செல்வன் அகிலாவுக்கு எனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இனிய கவிதை தந்த தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. திண்டுக்கல் தனபாலருக்கு எனது நன்றிகள்.. .

    தங்களின் வாழ்த்தை எனது மகனிடம் சொல்லி விடுகிறேன்...

    ReplyDelete
  4. நடனசபாபதி ஐயா அவர்களுக்கு நன்றிகள்.. .

    தங்களின் வாழ்த்தை எனது மகன்
    க. அகிலனிடம் சொல்லி விடுகிறேன்...

    ReplyDelete
  5. தங்கள் செல்ல மகள் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட என் இனிய வாழ்த்துக்களும்
    இங்கே உரித்தாகட்டும் ........

    ReplyDelete
  6. வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி தோழி...

    அகிலா என்பது பெண்குழந்தையின் பெயரை நினைவுபடுத்தினாலும்... எனது ஆண் குழந்தைக்குத்தான் பிறந்த நாள் தோழி...

    ReplyDelete
  7. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. வாழ்த்தியமைக்கு நன்றி தோழரே...

    ReplyDelete
  9. குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

    என்னுடைய கவிதை குருவே
    நிறைய ப்ளக்ஸ் ஆர்டர் ஆச்சுது அதனால கவிதை எழுத நேரமே கிடைக்கிலீங்க. இதோ என் புதிய கவிதை உங்கள் பார்வைக்கு.

    நிலா நீ
    நிற்காமல் எங்கே செல்கிறாய்
    நீ என்ன தேடுகிறாய்
    நின் நெற்றிவானின் நெடும் புதல்வன்
    நீல் ஆம்ஸ்ட்ராங்க் எங்கே என்று தானே

    பாலில் கலந்த சர்ககரையாய்
    பறக்கும் நிலாவே
    நான் என் சொல்வேன்

    சேதுபதி

    ReplyDelete
  10. அண்ணா இதோ இன்று எழுதிய கவிதை

    தேனீக்களே...தேனீக்களே
    ஏன் இப்படி
    அரக்கப் பறக்க திரிகிறீர்கள்
    உங்களுக்கு தெரியுமா
    அந்தத்
    தேன் உங்களுக்கு இல்லையென்று....

    சேதுபதி

    ReplyDelete
  11. என்னாங்க குருஜி இனையம் வரவே இல்லையா ? இன்றைய கவிதை கீழே எல்லா கவிதைக்கும் தனித் தனியாய் உங்க கருத்து வேண்டும் ப்லீஸ்

    சர்க்கரைப் பொங்கல்
    என்றால் கூட உப்பு
    போடனும் தெரியுமா

    மல்லிகைப் பூவுன்னாலும்
    நூல் இல்லாட்டி
    தலையில் ஏறமுடியுமா

    வன்ன வன்னப் பட்டங்கள்
    வானுயிர பறந்திட பசை
    இல்லாட்டி முடியுமா

    காஸ்ட்லீ காரா இருந்தாலும்
    பெட்ரோல் புல்லா இருந்தாலும்
    காரு ஒட பஞ்சர் இல்லா டயர்
    வேண்டும் அதை நீ அறியுமா

    அன்பே நீ என்னா
    வேண்டுமானாலும் நினைச்சுக்க
    நான் இல்லாட்டி நீ வாழ முடியுமா

    சேதுபதி

    ReplyDelete
  12. வணக்கம் குருஜி.. இதோ இன்றையக் கவிதை

    மரங்கொத்தி பறவையே
    மரங்கொத்தி பறவையே
    என்
    மனம் கொத்த அவளுக்கு
    நீயா கற்றுக் கொடுத்தாய்

    பௌதீகக் காற்றே
    வென்னீர் ஊற்றே
    காதல் மாயை என் மீது
    ஏன் தெளித்தாய்

    வால் உயர்த்திப் பறக்கும்
    மயில் போல் அன்பே-எனை
    ஏன் மாற்றினாய்

    பூங்காவனமே என்
    புஷ்பராகமே சொல்வாய்
    எனக்கொரு பதிலை

    (உங்கள் மதிப்புரையை ஆவலுடன் எதிபார்க்கும்)

    சேதுபதி

    ReplyDelete
  13. சிரிப்புக் காட்சி
    பார்த்தால் கூட என்னால்
    சிரிக்க முடியலை

    பாதி ராத்திரியில் வானில்
    பார்த்த நிலாவை -என்னால்
    ரசிக்க முடியலை

    பக்கத்தில் பார்க் இருக்கு
    போகத்தானே எனக்கு
    பிடிக்கலை

    சுட்டும் விழி சுடரே
    உன்னை பார்க்காமல்
    எனக்கு எதுவும் பிடிக்கலை

    சேதுபதி.

    குருஜி எங்கே தொலைதூரப் பயணம் போய்ட்டீங்களா ? ரொம்ப நாளாக கானவில்லையே.

    ReplyDelete
  14. இரவிற்க்கு ஒளியாவேன்
    வெயிலுக்கு நிழலாவேன்
    மழைக்கு நான் குடையாவேன்-நீ
    மாங்காய் திங்க உப்பாவேன்-உன்
    மெயில் ஜடிக்கு நான்
    திறவுச் சொல்லாவேன் -நீ
    உறங்குகையில் கனவாவேன்
    இத்தனையும் செய்யும் எனக்கு
    ஒரே ஒரு கேள்வி
    பெண்ணே உன்னிடம்
    ....எப்போ நான் உன்
    மனதினில் சிறையாவேன்

    சேதுபதி.

    உங்கள் விமர்சனங்களுக்கு வெயிட்டிங் சார்....

    ReplyDelete
  15. அனைத்து கவிதைகளும் நன்று...

    இன்னும் நிறைய மெருகேற வேண்டும்...

    தனியே ஒரு பிளாக்கர் துவங்குங்கள் தோழா...

    ReplyDelete
  16. சேதுபதி உங்களை இப்போ காணோமே..?

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...