எங்கள் அம்மா
புரட்சித்தலைவி அம்மா
தாயுள்ளம் கொண்ட அம்மா
என்றெல்லாம் பிதற்றும்
ரத்தத்தின் ரத்தங்களே
எந்த அம்மாவாவது
தனது மக்கள்
குடித்தழிந்து சாகட்டும்
என்று நினைப்பாளா?
டாஸ்மாக்கின் விற்பனைக்கு
இலக்கு நிர்ணயிப்பாளா..?
அப்படி நினைப்பவளை
வாய்கூசாமல் அம்மாவென்று
அழைக்கும் உங்களை
என்னென்று சொல்வது
எதனால் அடிப்பது?
மக்களுக்கு
போதையை ஊட்டி
புத்தியை மழுங்கடித்து
அதில் கிடைக்கும் வருவாயினை
வைத்து நடத்தும் ஈனப்பிழைப்பை
என்று ஒழிக்கிறாளோ
அப்போதுதான் அவள் உண்மையான அம்மா
அதுவரை அவள் வெறும் சும்மா?
(நன்றி: கார்டூனிஸ்ட் பாலா)
அருமை !அம்மாவை ஒரு பிடி பிடித்ததைப் போல் முந்தைய ஆட்சி செய்த அய்யாவையும் பிடி பிடித்தால் நியாயமாக இருக்கும் !
ReplyDeleteஅருமை நண்பா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
// ஈனப்பிழைப்பு //
ReplyDeleteசரியான சாடல்...
மேடம் என சொல்வதைத்தான் அந்த கட்சியின் தொண்டர்கள் அம்மா என்று தமிழில் சொல்கிறார்கள். எனவே அம்மா என்று சொல்வதை அவர்களைப் பெற்றெடுத்த அம்மாவுக்கு சமமாக எடுத்துக் கொள்ளவேண்டாமே.
ReplyDeleteபரவாயில்லை அம்மாவை விமர்சிக்க எதிர்கட்சிகளே தயங்கும் போது தங்களுடைய தைரியத்தை பாராட்டலாம்
ReplyDelete
ReplyDeletesuper G super.....
KOZHI KARAN
அன்புத் தோழர் பகவான்ஜிக்கு...
ReplyDeleteமுந்தைய 'கொய்யா' ஆட்சி சரியில்லை என்றுதானே... மக்களாகிய நாம் இந்த சும்மாவிற்கு வாக்களித்தோம்.
அந்த தவறை திருத்தும் பொறுப்பு இவர்களுக்குத்தானே இருக்கிறது. ஒருவன் செய்த தவறை மீண்டும் இவர்கள் செய்வது பெருந்தவறல்லவா...
ஆதலால் இவரை சாடுவதே சரியாகும்...
நன்றி குமார்...
ReplyDeleteநன்றி தனபாலரே...
ReplyDeleteநடன சபாபதி அவர்களுக்கு...
ReplyDeleteஅவர்கள் வைக்கும் பேனரைப் போய் பாருங்க... பதறிப்போயிடுவீங்க... இதுக்காவே ரூம் போட்டு யோசிப்பாய்ங்க...
உங்கள் வாதப்படி வைத்துக்கொண்டாலும் பெண் என்பவள் தாய்மையின் அம்சம்தானே...
அவள் குடியை விரும்புவாளா..?
அன்பு தோழர் சங்கர் அவர்களே...
ReplyDeleteநான் ஓர் இந்தியக் குடிமகன். நான் வாக்களித்திருக்கிறேன்... எனக்கு அந்த உரிமை இருக்கிறது...
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே தலைவா..!
நன்றி செல்வ தாமு...
ReplyDeleteநான் எந்த poster யும் பார்க்கவில்லை. ஆனாலும் நீங்கள் சொல்வது சரியே. என் செய்ய. தமிழ்நாட்டின் சாபம் தனி நபர் துதிபாடுவதுதான்.
ReplyDeleteநான் வெளி மாநிலங்களில் பணி செய்யும்போது மற்றவர்கள் 'ஏன் தமிழர்கள் இப்படி இருக்கிறீர்கள்?' எனக் கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் இருந்ததுண்டு.
இந்த இழிநிலை மாறும்... மாற வேண்டும்... மாற்ற வேண்டும்...
ReplyDeleteமாற்றுவோம் ஐயனே...