மூச்சுக்காற்றை
சிறை பிடிக்க முடியுமா
என்று என்னிடம்
சவால் விட்டாள்!
எப்படி முயன்றும்
"என்னால் முடியவில்லை அன்பே"
என்று தோல்வி சிறையில்
அடைபட்டுக் கொண்டேன்!
சிரித்துக் கொண்டே
அவளுடைய மூச்சுக்காற்றை
காற்றடைக்கும் தலையணையில்
சிறை பிடித்தாள்
என் செல்ல மகள்!
வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய
ReplyDeleteஅருமையான கவிதை
'தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி அவர்களே...
ReplyDeleteகவிதை அருமை நண்பா...
ReplyDeleteஅருமை... வாழ்த்துக்கள்...
ReplyDelete“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.’’
ReplyDeleteஎன்ற அய்யன் வள்ளுவனின் குறள் தான் நினைவிற்கு வந்தது தங்களின் கவிதையைப் படித்ததும்.
வாழ்த்துக்கள் தங்களுக்கு உங்கள் கவிதைக்காக! உங்கள் செல்ல மகளுக்கும் வாழ்த்துக்கள் தகப்பன் சாமி ஆனதிற்காக!
நட்பிற்கு நன்றிகள்...
ReplyDeleteமகிழ்ச்சி தனபாலரே...
ReplyDeleteநன்றி நடனசபாபதி அவர்களே...
ReplyDeleteI really enjoyed your blog posts thank you.
ReplyDelete