Wednesday, October 29, 2014
Saturday, October 25, 2014
யாழிசையும் குழலிசையும்..! - பிறந்தநாள் வாழ்த்து கவிதை!
யாழிசையும் குழலிசையும் உன் மழலைக் குரலுக்கு
முன்னால் மண்டியிடுகிறது எங்கள் சந்திர மகவே!
தவமிருந்து பெற்ற தமிழகத்தின் தனிப்பெரும் சொத்தே!
சந்திரனுக்கும் சங்கீதாவிற்கும் நீ விலைமதியா முத்தே!
வங்காளம் தாண்டி சிங்காசனமிட்ட எங்கள் வம்ச வித்தே!
செந்தமிழ் கொண்டுனக்கு எழுதுகிறேன் பிறந்தநாள் வாழ்த்தே!
ன்று போலென்றும் மகிழ்வோடு மாநிலம் போற்ற வாழ்க!
புவனம் போற்ற வளர்க எந்தன் மகவே உனக்கு என் வாழ்த்து!
(இன்று பிறந்தநாள் காணும் எனது தம்பி சந்திரனின் மகனுக்காக நான் எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை... இக்கவிதையின் 1,3,5,7 வது வரிகளில் உள்ள முதல் எழுத்துக்களை மேலிருந்து கீழாக வரிசைப்படி படித்தால், பிறந்த நாள் கொண்டாடும் மழலையின் பெயர் கிடைக்கும். கிடைச்சுதா.. சொல்லுங்க...!)