Wednesday, March 25, 2015

நீயெங்கு போனாயடி?


திரும்பும் திசையெங்கும் நீ
திரும்பும் இடமெங்கும் நீ
தீயை தொட்டாலும் நீ
தீவாய் விட்டாலும் நீ
கண்ணில் படுவதெல்லாம் நீ
கண்கள் தொடுவதெல்லாம் நீ
கரங்களின் தொடுதலும் நீ
காற்றின் வருடலும் நீ
நீ... நீயென என்னுள் எல்லாமே
நீயாகிப் போனதால்
என்னைத் தேடித் தேடி
உன்னுள் தொலைந்து போகிறேன்!
நிஜத்தில் நீயெங்கு போனாயடி?

Tuesday, March 24, 2015

இன்னுமொரு இளவலாய்..! - பிறந்தநாள் வாழ்த்து


ந்தனத்து வாசமும் சங்கத்தமிழ் நேசமும்
       வந்தனம் பாடும் வேளையில் வந்துதித்தாய்!

ந்திரன் பிறந்தானென்று நம் பெற்றோருனக்கு
      மலேயாவில் தமிழையும் உனக்கூட்டி வளர்த்தனர்!

தி
ரைகடலோடி திரவியம் தேடிய எம்குலத்தின்
     இன்னுமொரு இளவலாய் நீ பிறந்த தினமின்று!
களையாய் நீ குறும்பு செய்த காலங்களில்
      உன்னோடு நான் இல்லாமல் போய்விட்டேன்!
ன்று போல் என்றும் நீ மலர் போல் சிரித்தபடி
      பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்கவே!


(1,3,5,7,9 வரிகளின் முதல் எழுத்துகளை மேலிருந்து படித்தால்... இன்று பிறந்தநாள் காணும் எனது தம்பியின் பெயர் கிடைக்கும்... புகைப்படத்தில் தனது மகனுடன் எனது தம்பி)