சந்தனத்து வாசமும் சங்கத்தமிழ் நேசமும்
வந்தனம் பாடும் வேளையில் வந்துதித்தாய்!
ந்திரன் பிறந்தானென்று நம் பெற்றோருனக்கு
மலேயாவில் தமிழையும் உனக்கூட்டி வளர்த்தனர்!
திரைகடலோடி திரவியம் தேடிய எம்குலத்தின்
இன்னுமொரு இளவலாய் நீ பிறந்த தினமின்று!
ரகளையாய் நீ குறும்பு செய்த காலங்களில்
உன்னோடு நான் இல்லாமல் போய்விட்டேன்!
ன்று போல் என்றும் நீ மலர் போல் சிரித்தபடி
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்கவே!
(1,3,5,7,9 வரிகளின் முதல் எழுத்துகளை மேலிருந்து படித்தால்... இன்று பிறந்தநாள் காணும் எனது தம்பியின் பெயர் கிடைக்கும்... புகைப்படத்தில் தனது மகனுடன் எனது தம்பி)
செல்வன் சந்திரனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.!
ReplyDeleteதங்களின் இளவலுக்கு எனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்தியமைக்கு நன்றி @ஊமைக்கனவுகள்
ReplyDeleteநன்றி நடனசபாபதி அவர்களே...
ReplyDelete