உனை நினைத்ததால்
ஊன் மறந்தேன்
உயிர் மறந்தேன்
உடல் மறந்தேன்
உடுத்தும் ஆடை மறந்தேன்
உறவின் முறை மறந்தேன்
இப்படி பலவற்றை மறந்து
உனையே சுற்றுகிறேன்
என்கிறாயடி…
நீயாவது எனை
சுற்றுகிறேன் என்றாய்
என் நிலையோ
இங்கு படுமோசம்
என் உலகமே
உனைச் சுற்றிக்கொண்டிருக்கிறது
இதற்கு நான் என்ன செய்ய..!?
வணக்கம்
ReplyDeleteஅருமை இரசித்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்...
ReplyDeleteவாழ்த்தியமைக்கும் வருகைக்கும்...