அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...
ஆசை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..!
இனிய தமிழ் பயிற்றுவித்த எங்கள் ஆசிரியையே...
இனிய கதை சொல்லித்தந்த எங்கள் ஆசிரியையே...
ஈன்ற தாயைப் போல நாங்கள் வணங்குவோம் உம்மையே..!
உலக மொழி ஆங்கிலத்தை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...
உண்மைதனை எடுத்துரைத்த எங்கள் ஆசிரியரே...
ஊர் கேட்க சொல்லிடுவோம் உங்கள் பெருமையே..!
எண் கணிதத்தை கற்றளித்த எங்கள் ஆசிரியையே...
எளிமைதனை எமக்களித்த எங்கள் ஆசிரியையே...
ஏற்றிடுவோம் உன் புகழை உலக ஏட்டினிலே..!
ஐம்புலனும் அறிவியலை அறியவைத்த எங்கள் ஆசிரியரே...
ஐயங்களை நீக்கி வைத்த எங்கள் ஆசிரியரே...
ஒழுக்கம் கற்று நிற்கின்றோம் உங்கள் அன்பு முறையிலே..!
ஓர் நிலை சமூகஅறிவியலை படிக்க வைத்த எங்கள் ஆசிரியையே...
ஓர்குலம் நாமெல்லாம் என்றுரைத்த எங்கள் ஆசிரியையே...
ஔவை போல கற்று தெளிந்தோம் உங்கள் வழியிலே..!
எஃகு போல் உடற்கல்விதனை உய்ய வைத்த எங்கள் ஆசிரியரே...
(எ)ஃகணமும் தொழுது நிற்போம் உந்தன் பணியையே..!
(செப்டம்பர் 5 அன்று ஆசிரியர் தினம், இந்நாளில் என்னை இந்த அளவிற்கு ஆளாக்கிய எனது ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள் உரித்ததாகட்டும்... வாழ்க ஆசிரியர் குலம்...)
I cant express in words..........
ReplyDeleteI cant express in words........
ReplyDeleteநன்றி தியாகராஜன்...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
காலம் கடந்து வாழ்த்தினாலும்... அது எனக்கு மகிழ்ச்சிதான்...
ReplyDeleteரொம்ப அழக உணர்ச்சி புர்வமா இருக்கு.மிகச்சிறப்பு
ReplyDeleteSir superrrrrrrr kavithai
ReplyDelete