Thursday, October 22, 2009

எனை என்ன செய்தாய் பெண்ணே..?




என் அலைபேசி ஒலிக்கும் போதெல்லாம்
நீதான் அழைக்கிறாய்
என ஓடோடி வருகிறேன்..!
குறுந்தகவல் வரும்போதெல்லாம்
குறும்புக்காரி நீதான் அனுப்பினாய்
என ஆவலோடு ஓடி வருகிறேன்..!
நீ இல்லை என்று தெரிந்ததும்
வாடிப் போகிறேன்..!
இப்படி யார் அழைத்தனுப்பினாலும்
எனக்கு நீ அழைத்தனுப்புவதாகவே தோன்றுகிறது…
எனை என்ன செய்தாய் பெண்ணே..!

2 comments:

  1. முகமூடி விலக்கி பார்த்திருக்கும்.... உங்கள சுத்தி பட்டாம் பூச்சி பறக்கிறதா???

    ReplyDelete
  2. அதையேன் கேட்கிறீர் கருணாகரசு...

    எனைச் சுற்றிப் பறந்த பட்டாம் பூச்சிகளைப் பார்த்து என்னவளுக்கு ஏற்பட்ட வெட்கத்தை என்னென்று சொல்ல... அதற்கொரு கவிதையை வடிக்கிறேன் பாருங்கள்...

    வருகைக்கும்... கருத்திற்கும் பணிவான நன்றிகள்...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...