Tuesday, November 24, 2009

உன் கடைக்கண் பார்வை..!




வானத்தில் ஏழு வண்ணங்கள்
சேர்ந்தால்…
அது வானவில்..!
நினைவில் பல எண்ணங்கள்
சேர்ந்தால்…
அது கவிதை..!
நிகழ்வில் நம் மனங்கள்
சேர்ந்தால்…
அது காதல்..! அதுதான் காதல்..!

"""""""""""""***""""""""""""

சூரியனின் பார்வை
பட்டால்தான்
இந்த உலகம் விழிக்கும்..!
சந்திரனின் பார்வை
பட்டால்தான்
அந்த இரவும் விழிக்கும்..!
உன் கடைக்கண்
பார்வை பட்டால்தான் பெண்ணே
என் காதல் விழிக்கும்..!

"""""""""""""***"""""""""""

8 comments:

  1. கவிதைகளில் காதல் ரசம் சொட்டோசொட்டென சொட்டுகிறது நண்பா. மிக அருமை!!!

    ReplyDelete
  2. வாங்க நண்பரே...

    காதல்தான் என்னை தற்பொது வாழ வைத்துக் கொண்டிருக்கிறது... அது வாழ்நாள் முழுக்க நீளும்...

    இவைகள் கொஞ்சம்தான்... இன்னும் நிரம்ப இருக்கின்றன... வாசித்து மகிழுங்கள்...

    தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் கனிவான நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. மிகவும் அருமையாக ரசித்து ருசித்து எழுதியுள்ளீர்கள் நண்பரே...

    ReplyDelete
  4. வணக்கம் தோழரே...

    காதல் என்றால் அது என்றும் ரசித்து, ருசிக்கக் கூடியதே...

    அதன் விளைவே இக்கவிதைகள்...

    தங்களின் வருகைக்கும், தங்களின் மேலான கருத்திற்கும் கனிவான நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. படம் எல்லாம் நல்லாருக்கு..!!

    ReplyDelete
  6. நீர்தானய்யா உண்மையைச் சொல்லுகிறீர்...

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... என் உமது சுட்டலை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேனய்யா...

    புரிந்து கொண்டேன்... சிறந்த படைப்புகளை தர முயற்சிக்கிறேன்...

    தங்களின் வருகைக்கும், தங்களின் உள்ளம் திறந்த கருத்திற்கும் கனிவான நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...