Tuesday, March 30, 2010

என் காதலை எப்படியும்..!


ஆளரவமற்ற பாலைவனத்தில்
அனாதையாய் உனைத்
தேடுகின்றேன்..!
நீ போன வழியினைத்
தேடித் தேடி
ஓடாய்த் தேய்ந்தபடி
உனைத் தேடிக்
கொண்டிருக்கிறேன்..!
ஒவ்வொரு நாள்
சூரியன் உதிக்கும் போதெல்லாம்
என் காதலை எப்படியும்
கண்டு பிடித்துவிடுவேன்
என்ற நம்பிக்கையை மட்டும்
தேய்த்து விடாமல்..!

5 comments:

  1. ஐய்யய்யோ....
    என்னாச்சு?
    ரொம்பவும் ஈடுபாடான தேடுதல்
    போலும்!!


    நேரமின்னையால்
    முன்னாடி உள்ள கவிதைகளை
    இப்போதுதான் படித்தேன் நன்று
    நன்றி.

    ReplyDelete
  2. வாங்'கலா...'

    என் ஆளு ஊருக்குப் போயிடாகளா..அதான் இப்படி...

    நாளைக்கு வந்துருவாக...

    அப்புறம் பாருங்க...

    பரவாயில்லை தோழி... தாமத வருகை என்றாலும்... வருகை வருகைதானே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. வாங்க குமார நண்பரே...

    தங்களின் வருகை எனக்கு மிகவும் மகிழ்வைத் தருகிறது...

    வாழ்த்திற்கு மிக்க நன்றி..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. நன்றி தலைவன் குழுமத்திற்கு...


    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...