Wednesday, April 7, 2010

பேசவே முடியவில்லையடா..!


உன்னிடம் என்னால்
பேசவே முடியவில்லையடா..!
எப்படிப் பேசினாலும்
உன் பேச்சால்
எனை மடக்கி விடுகிறாய்..!
என பொய்க் கோபம் காட்டும்
என் பொன் மணியே...
என்னதான் நானுனை
பேச்சினில் மடக்கினாலும்...
எனை உன் ஓரேயொரு
ஓற்றைப் பார்வை மடக்கி விடுகிறதே..!
அதற்கு முன்பு என் பேச்சொன்றும்
பிரமாதமில்லையடி..!

2 comments:

  1. என் மனமகிழ்ச்சியுடன்..அன்பான
    பிறந்த நாள் வாழ்த்துகள்.
    {தாமதம் மன்னிக்கவும்}

    மோகனன்{காதலிக்கும் போது} இப்போது
    பேசுவதைக் கேட்டுப்
    பெருமை கொள்வது..
    .
    திருமணம் ஆகிய பின் இப்படிப் பேசினால்...
    வாயாடி,ஆணுக்கு மதிப்புக் கொடுக்கத் தெரியாத
    பெண் என்றெல்லாம் பட்டம் சூட்டுவது

    நீங்கள் இல்லை!! நான் நடமுறையைச் சொன்னேன்.

    ReplyDelete
  2. வாழ்த்திற்கு ந்ன்றி தோழி... மன்னிப்பு தேவை இல்லை...

    நீங்கள் நடைமுறையைச் சொன்னாலும் சரி... நான் அப்படி இல்லை...

    எனக்கு திருமணமாகி விட்டது... நான் காதலுக்கும் போதும் சரி... மணத்திற்குப் பிறகும் சரி... என் இல்லாள் இதைத்தான் சொல்லுகிறாள்... அவளை நான் வாயாடி என சொன்னதில்லை...

    என்னுள் பாதி அவளென்பதால்... அவளுக்கும் சம உரிமை உண்டு என்பதில் ஆழ்ந்த நம்பிக்கு உள்ளவன் நான்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...