Wednesday, May 5, 2010

நீ எந்தன் காதலியானால்..!


வெண்ணிலவில் வீடு கட்டி
என் பெண்ணிலவே
உனைக் கூட்டிச் சென்று
விண்மீன்களே அசரும்படி...
உன் விரல்களைப் பற்றிக்கொண்டு
வானவீதியில் உலா வருவேன்..!
வண்ண மயில் இறகினிலே   
வாகாக மெத்தை செய்து...
பெண்மயிலே அதில் உன்னை
தூங்க வைப்பேன்..!
வெண்மேகத்தின் மழைத்துளிகளை
அருவியாக்கி
பொன் மயிலே உனை
குளிக்க வைப்பேன்..!
அதிகாலைக் கதிரவனை
அழைத்து வந்து
உன் கார்மேகக் கூந்தலை
காய வைப்பேன்..!
இவையத்தனையும் செய்ய
என்னால் முடியும்
நீ எந்தன் காதலியானால்..!

9 comments:

  1. மிகவும் நன்றி நண்பரே..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  2. இத்தனை ஆசைகளும் நிறைவேற
    வேண்டுகிறேன்.
    ஆமா கல்யாணம்தான் ஆயிடிச்சே!
    இன்னுமொரு காதலியா!!??

    நல்ல கற்பனை மோகனன்.நன்றி

    ReplyDelete
  3. காதலுக்கு ஏது தோழி எல்லை..?

    வாழ்த்திற்கு மிகவும் நன்றி..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு நண்பா.

    ReplyDelete
  5. தலைவன் குழுமத்திற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..!

    ReplyDelete
  6. அன்புத் தோழர் குமார் அவர்களே...

    தங்களின் ரசனைக்கு எனது நன்றிகள் பற்பல...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. ரொம்ப நல்லா இருக்கு நம்பரே!அப்புறம் சீக்கிரம் நீங்களும் உங்க காதலியும் நாசா ஆராய்சி நிலையத்துக்கு போங்க!நீங்க நிலவில வீடு கட்டிரலாம்.....சீக்கிரம்......................!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  8. அன்புத் தோழர் ராமு அவர்களுக்கு...

    தங்களின் ரசனைக்கு எனது நன்றிகள் பற்பல... நாங்க நிலவில எப்பயோ வீடு கட்டிட்டோம்ல...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...