Monday, May 31, 2010

உன் மயக்கம்..!

உன் அதர வாய் திறந்து
அன்பாய் என்னை
நீயும் அழைக்கும் போது…
என் உயிரும் உருகி வழிகிறது...
உனக்குள் புதைய நினைக்கிறது..!
செல்லமாய் நீ எனை அடித்து
விளையாடும் போது...
என் கரமோ
உன்னை அணைக்கத் துடிக்கிறது...
உன் கன்னத்தைக்
கிள்ள நினைக்கிறது..!
குறும்பாய் நீயும் சிரித்திடும் போது...
உன் கன்னக்குழியின்
அழகைப் பார்த்து
என் உள்ளமும்
மகிழ்ச்சியில் விரிகிறது...
உன்னோடு ஊடல்
கொள்ள விழைகிறது..!
உன் வெட்கச் சிவப்பை
பார்த்தத்திலிருந்து...
அடிக்கடி உனை வெட்கப்பட
வைக்கத் தோணுகிறது...
உன் வெட்கத்தில்
திளைக்கத் தோணுகிறது..!
போதும் பெண்ணே உன் மயக்கம்...
எனை ஏற்றுக் கொள்வதில்
ஏன் தயக்கம்..?

10 comments:

  1. //போதும் பெண்ணே உன் மயக்கம்..!
    எனை ஏற்றுக் கொள்வதில்
    ஏன் தயக்கம்..!
    //

    அவங்களுக்கும் உங்களைப்பார்த்தா இதே மாதிரி தோனுச்சுன்னா உடனே ஏத்துக்கவாங்க மோகன்

    நல்ல கவிதை நன்றி

    ReplyDelete
  2. ஏத்துகிடனும்னுதானே தோழரே இவ்வளவும் செய்யறேன்..!

    வருகைகக்கும்... வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. உருகி வழிகிறது...\\\\

    அணைக்கத் துடிக்கிறது\\\\

    மகிழ்ச்சியில் விரிகிறது...\\\\

    ஊடல்
    கொள்ள விழைகிறது\\\\\

    உனை வெட்கப்பட
    வைக்கத் தோணுகிறது\\\\\

    எனை ஏற்றுக் கொள்வதில்
    ஏன் தயக்கம்\\\\
    ஜயோ மோகனன் இன்னுமா புரியவில்லை!
    இந்தச் சின்னச் சின்ன வினாக்களுக்கெல்லாம்
    பதில் தெரியாமல்.....?? நான் சொல்ல
    வேண்டி இருக்கிறது,

    நீங்கள் வைத்த ஜஸ்ஸில் நான் ஒன்றும்
    உருகமாட்டேன் என்கிறார்
    ஜஸ் வைப்பதில் கெட்டிக்காரர் போலும்!!

    உங்கள் கவி ஜில்லென்றிருக்கிறது நன்றி

    ReplyDelete
  4. ம்ஹீம்...இந்த பெண்களே இப்படித்தான்... உண்மையைச் சொன்னால் ஜஸ் என்பார்கள்...

    நான் சொன்னது அனைத்தும் உண்மையிலும் உண்மை தோழி...


    வருகைகக்கும்... வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. என்னமோ பன்னுகிரது மயக்கம் ( மரணம் )மட்டும் வரவில்லை ந‌ண்ப‌ரே

    இங்கே செந்தில்குமார்.அ.வெ

    ReplyDelete
  6. காதலெனில் மயக்கம்தான்.. அதன் சுகமோ ஒரு கிறக்கம்தான்...

    வருகைகக்கும்... வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. அருமை கலக்குறீங்க பாஸ்

    ReplyDelete
  8. காதல் மயக்கத்தினடே பிறந்த கவி

    வாழ்த்துக்கள் கவிஞரே

    ReplyDelete
  9. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி

    தமிழ் தோட்டமே வருக வருக...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  10. நான் கவிஞனில்லை தோழா...

    காதல் மயக்கத்தில் கிறுக்கிய வரிகள் இவை.. அவ்வளவே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...