Tuesday, June 8, 2010

உன் கண்ணோடு உறவாடும்...


கண்ணாடி அணிந்த உன்
முகத்தைப் பார்த்தேன்..!
நிலவிற்கு கண்ணாடியா
என அதிசயித்துப் போனேன்..!
அடி என் அமுதழகே..!
அழகான என் கண்ணழகே..!
உன் கண்ணாடியாகவேனும்
நான் இருந்திருக்கக் கூடாதா..?
தினமும் உன்னோடு இருப்பது மட்டுமின்றி
உன் கண்ணோடு உறவாடும்
பாக்கியமாவது கிட்டியிருக்குமே..!
நான் என்ன செய்வேன்...
நான் என்ன செய்வேன்..?

(என்னவளுக்கு திடீரென கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயம் வர, அவள் அணிந்து கொண்டு என் முன்னே வந்தாள்...  அப்போது அவளுக்காக நானெழுதிய கவிதை..!)

4 comments:

  1. பதிவுலகில் இன்றைய டாப் டென் பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete
  2. தகவலுக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  3. கண்ணாடியாக வேண்டும் என்ரு மட்டும் கனவு காணாதீர்கள்
    பெண்கள் அடிக்கடி மறப்பது ,கண்ணாடியைக் கழட்டிவைத்த இடத்தைதான்

    ReplyDelete
  4. அன்பான கோ மா விற்கு...

    தாங்கள் சொல்லியது அத்துனையும் உண்மைதான்... ஆயினும்...

    பெண்கள் அடிக்கடி மறப்பது ,கண்ணாடியைக் கழட்டிவைத்த இடத்தைதானே தவிர... கண்ணாடியை அல்ல..!

    தங்களின் மேலான வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் எனது பணிவான நன்றிகள்...

    அடிக்கடி சுவாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...