Wednesday, June 9, 2010

என்னழகே உன்னழகை ...!

செங்காந்தள் மலரெடுத்து
உன் கருங்கூந்தலில் சூடி விட்டு...
செஞ்சாந்துப் பொட்டெடுத்து
உன் பிறை நெற்றியில் திலகமிட்டு...
வெண்காஞ்சிப் பட்டெடுத்து
உன் பொன்னுடலில் கட்டி விட்டு...
பொன் தாலிதனை யெடுத்து
உன் வெண்சங்குக் கழுத்தில் கட்டி விட்டு...
உனைப் பார்க்கிறேன்...
செங்கதிரோன் மறையும் வேளையில்
வெள்ளி நிலவு எழுவது போல்
என் முன்னே நிற்கின்றாய்...
என்னழகே உன்னழகை
என்னென்று சொல்வேன்...
ஏதென்று சொல்வேன்..!

8 comments:

  1. பூவைக்கு இத்தனை
    புனைச்சூடலா?
    பூவை அள்ளி வீசியவிதம் இதம்
    நன்றி மோகனன்

    ReplyDelete
  2. வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete
  3. தங்களின் மேலான வருகைக்கும்... இதமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி தோழி..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. தங்களின் மேலான தகவலிற்கு மிக்க நன்றி தோழரே..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. நல்முயற்சி. தொடருங்கள் .

    ReplyDelete
  6. அடடா என்ன ஒரு ,காதல் மிளிரும் கவிதை வரிகள்
    அசத்தல்

    ReplyDelete
  7. அன்பான கலா நேசன் அவர்களுக்கு...

    தங்களின் மேலான வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் எனது பணிவான நன்றிகள்...

    அடிக்கடி சுவாசிக்க வாங்க..!

    ReplyDelete
  8. அன்பான கோ மா விற்கு...

    தங்களின் மேலான வருகைக்கும், சிலாகிக்கிப்பிற்கும், வாழ்த்திற்கும்... பின்னூட்டத்திற்கும் எனது பணிவான நன்றிகள்...

    அடிக்கடி சுவாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...