Monday, June 14, 2010

உன் திறமைகளை..!

தேவைகள் வரும்போதுதான்
திறமைகள் வெளிப்படும்
என்பார்கள்..!
உனக்குள்
திறமை ஏதுமில்லை
என்று அழுது
புலம்பாதே அன்பே..!
இரும்பாய் இருந்த
என்னைக் கூட
கரும்பாய் மாற்றிய
திறமை உன்னிலிருக்கிறது
என்பதை மறவாதே அன்பே..!
உன்னுள்ளும் ஆயிரம்
திறமைகள் உண்டென்பதை
மறவாதே...
மறந்தும் இராதே..!
உன்னுள்ளே நானிருக்கிறேன்
உன் திறமைகளை நானறிவேன்
வா பெண்ணே சாதிப்போம்
வாழ்க்கையில் நாம் இணைந்தபடி..!

4 comments:

  1. அருமையான கவிதை

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழரே..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. சாதிப்போம் ........சூப்பர். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தங்களின் வாழ்த்திற்கு அடியவனின்
    அன்பான நன்றிகள் தோழரே..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...