Thursday, July 15, 2010

கல்விக் கண் திறந்ததினால்..! - பிறந்தநாள் கவிதை


கல்விக் கண் திறந்ததினால்
எங்கள் கல்வித் தந்தை ஆனீர்..!
எளிமை வாழ்க்கை வாழ்ந்ததினால்
ஏழைகளின் ஏந்தலானீர்..!
அரசியலில் நேர்மைதனை காத்ததினால்
அரசியலுக்கே ஆசானானீர்..!
பல தொழிற்சாலைகள் திறந்ததினால்
நாட்டின் தொழிற்தந்தை ஆனீர்..!
நீரணைகள் கட்டியதால் தாகம்
தீர்த்த தீர்க்கதரிசியானீர்..!

பஞ்சமர்களும் பணிந்து கிடக்கவிருந்த
குலக்கல்வி திட்டத்தினை அழித்தீர்..!
பாமரக் குழந்தைகளும் கல்வி பயில
பல கல்வி சாலைகள் படைத்தீர்..!
மதிய உணவுத் திட்டம் படைத்து
மகத்தான வெற்றி பெற்றீர்..!
கடைக்கோடி ஏழையும் பயனுற
ஏற்ற பல திட்டமமைத்தீர்..!

உம் போன்ற ஓர் ஒப்பற்ற தலைவனை
இத்தமிழ்நாடு மட்டுமல்ல
எந்நாடும் கண்டதில்லை ஐயா..!
அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினை
யாரும் வாழ்ந்ததில்லை ஐயா..!
நீ பிறந்த இந்நாட்டில்
நானும் பிறந்திருக்கிறேன் என
நினைத்து பேருவகை கொள்கிறேன்..!
நீ பிறந்த இந்நாளில்
உன்னடி தொட்டு உன் வழி
நடக்கின்றேன் ஐயா..!

16 comments:

  1. நல்லுள்ளம் கொண்ட ஐயா,
    ஆரோக்கியத்துடன் வாழப்......
    பிராத்திக்கின்றேன்

    ReplyDelete
  2. அன்பான தோழிக்கு

    இவர் நம் கல்விக் கண் திறந்த காமராசர் ஐயா அவர்கள்...

    அவர் இன்று நம்மோடு இல்லை.. ஆயினும் அவர் நம் மனங்களில் வாழ்கிறார்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. அரசியலில் தனி நபர் ஒழுக்கம், நேர்மை இவற்றைப்பேணிக்காத்தவர். கல்வி, தொழிற்சாலை, விவசாயம் இவற்றை தம் கண் எனக் காத்தவர். அவர் தம் பிறந்த நன்னாளில் இவரைப்போன்று ஒருவரை தமிழகத்தில் மற்றும் மத்தியில் ஆட்சியில் அமர்த்த நாம் உறுதியெடுப்போம்.
    மா.மணி

    ReplyDelete
  4. கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வணக்கம் தோழரே...

    உண்மையான வார்த்தை மாணிக்கம்... உறுதி மட்டுமல்ல.. அது போன்றதொரு பொற்காலம் அமைய நாமனைவரும் ஒன்றினைந்து செயலாற்றுவோம்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சரவணன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. சூப்பர்

    ReplyDelete
  8. Thanks super bro

    ReplyDelete
  9. 𝓢𝓤𝓟𝓔𝓡

    ReplyDelete
  10. சூப்பர்

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...