Wednesday, October 27, 2010

என்ன நோயடி இது..?

எங்கு திரும்பினாலும்
எதிரில் நீயாகவே தெரிகிறாய்..!
யாருடன் பேசினாலும்
எதிரில் நீ பேசுவதாகவே தெரிகிறாய்..!
நான் எங்கு சென்றாலும்
நிழல் போல் என்னுடன்
நீயும் வருவதாகவே தெரிகிறாய்..!
என்ன நோயடி இது..?
உலகமே மறந்து போய்
உன் நினைவுகள் மட்டுமே
எனக்கு உலகமாகி இருக்கிறது..!

8 comments:

  1. எங்கு திரும்பினாலும்
    எதிரில் நீயாகவே தெரிகிறாய்..!
    யாருடன் பேசினாலும்
    எதிரில் நீ பேசுவதாகவே தெரிகிறாய்..!
    நான் எங்கு சென்றாலும்
    நிழல் போல் என்னுடன்
    நீயும் வருவதாகவே தெரிகிறாய்..!
    என்ன நோயடி இது..?\\\\\\\\

    இதுதான் பெண் பித்துப் பிரமை
    நோயடா.....
    வீதியில் நடமாடும் பெண்களே!
    கவனம் எதிரில் வருவது மோகனன்
    என்று தெரிந்தால்! ஜீ வோ ம்பா சொல்லி.......

    ReplyDelete
  2. கலாவின் கலாய்ப்பிற்கு...

    இந்த மோகனனின் இனிய நன்றி...
    பெண் பித்து என்பது தவறு.. என் காதலியின் மேல் நான் கொண்ட பித்து என்று சொல்ல வேண்டும் கலா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. பெண் பித்து என்பது தவறு.. என்
    காதலியின் மேல் நான் கொண்ட
    பித்து என்று சொல்ல வேண்டும்\\\\\

    சரிங்க..நான் ஒத்துக்கொள்கிறேன்....ஆனால்

    உங்கள் காதல் ஆண்,மரம்,செடி,கொடி,மற்றும்
    எதனிடமுமோ,எவரிடமுமோ
    இல்லையே! ஒரு பெண்ணிடம்தானே
    அதனால் பெண் பித்தென்றேன்
    காதல்மேல் பித்தென்று சொல்கிறீர்கள்
    அந்தக் காதல் யாரிடம் இருக்கிறது..??
    உங்கள் காதலியிடம்தானே,காதலி பெண்தானே!!

    பெண்கள் பித்தென்றால்தான் தப்பு
    {உங்களைத் தப்பாய் எடைபோட்டதாய்த்
    தோணும்}

    ReplyDelete
  4. சும்மா இந்த சமாளிப்புகள் தேவையில்லை...

    பெண் பித்து என்ற சொல் தவறாய்த்தான் எடை போடும்...

    ஆணிடம் காதலெனில் ஆகாத ஒன்று... மற்றவைகள் மேல் ரசிக்கும்படியான அளவிற்கு காதல் உண்டு.. ஆனால் வாழ்வதெனில் காதலியோடு மட்டும்தானே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. எல்லாம் காதல் செயிர வேலை

    ReplyDelete
  6. அதேதானுங்க யாதவன்...

    தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் இனிய நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. நண்பா.. கவிதை நல்லாயிருக்கு...

    நானும் எனது பதிவுகள் குறித்த உன் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்....

    ReplyDelete
  8. அன்பு நண்பருக்கு தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் இனிய நன்றிகள்...

    புது இடம், புது அலுவலகம்... இதற்கெல்லாம் அனுமதி இல்லை.. ஆதலால் நேரமுமில்லை...

    நேரமிருக்கும் போது அவசியம் வருவேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...