குட்டிவயசு மோகனன்
செயலில் நல்லதைச் செய்திட
எதிலும் புதியதைப் புகுத்திட
நல் வளமும் நாட்டில் செழித்திட
என் சொல்வளம் எங்கும் பலித்திட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!
தீயனவனவற்றைத் 'தீ'யிட
பொல்லாதவைகளை அகற்றிட
பொறாமைதனை பொசுக்கிட
தீவிரவாதத்தை அழித்திட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!
ஊழல் லஞ்சம் மறைந்திட
உண்மை நேர்மை ஓங்கிட
சாதிய அரசியல் மாய்ந்திட
சத்திய அரசியல் மலர்ந்திட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!
உழவுத் தொழில்கள் பெருகிட
உழைக்கும் வர்க்கம் உயர்ந்திட
ஏற்றத் தாழ்வுகள் நீங்கிட
எங்கும் சமத்துவம் பரவிட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!
புவியில் மாசு குறைந்திட
எங்கும் நல்மழை பெய்திட
சுயநலம் சுருங்கிப் போய்விட
பொதுநலம் பிறந்து வளர்ந்திட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!
உலகில் அமைதி நிலவிட
உங்கள் திறமைகள் வெளிப்பட
உங்களின் நட்பு பெருகிட
உலகில் காதல் உயர்ந்திட
பிறக்கட்டும் இந்தப் புத்தாண்டு..!
- மோகனன். 31.12.2010
(எனது அன்பிற்கினிய இணைய வாசகர்களுக்கு, இந்த மோகனனின் இனிப்பான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2011
வாழ்க வளமுடன்)
This comment has been removed by the author.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழரே...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வளமும் நலமும்
ReplyDeleteநிதமும் நிறையும்
புத்தாண்டு 2011
அமைய வாழ்த்துக்கள்
நன்றிங்க தோழரே...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
your new year poem very very supper
ReplyDeletehappy new year
i late wish for you...
என் அன்பு வணக்கம்
ReplyDeleteஅரும்பும் ஆழ்மனமும் ஒன்றுதான் அது மலர மலர… மணம் வீசும்
விரும்பு தன் சுகந்தத்தை
அது சுகம் தரும் உன் வசந்தத்தை.
-----------------------------
என் உளம் புகுந்த
உங்கள் உண்மை அன்பினால்
என் வளமுயர…
வசந்தமாகிறது என் வாழ்நாள்...
என் மனம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்
என்றென்றும் அன்புடன்…
தே. கலா
thinam thinam
ReplyDeleteKalai vidivade
Ungal
Pondra
Kavignarkalin
Kavithai Kulanthaikalai
Thookki Makilvatharke....
Moganan Kutti Moganan very cute!
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தேவரூபன்...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
அன்பு நிறை கலா அவர்களுக்கு...
ReplyDeleteதங்களின் வாழ்த்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது...
வாழ்த்தியமைக்கும், தொடரும் ஆதரவிற்கும் எனது நன்றிகள் பற்பல...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
அன்பான ஜோதி அவர்களுக்கு...
ReplyDeleteதங்களின் வாழ்த்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது...
ஆனால் நான் அழகென்றுர எவ்வளவு அழகாகப் பொய் சொல்கிறீர்கள்...
ம்ம்ம்... இருக்கட்டும்... எனக்கும் ஒரு காலம் வரும்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
2011 சிறப்பானதொரு ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் நண்பா.
ReplyDeleteநன்றி நண்பா..!
ReplyDelete