Wednesday, January 12, 2011

அரசி நீ எனில்..!


பூவிற்க்கெல்லாம்
அரசி நீ எனில்...
வண்டிற்கெல்லாம்
அரசன் நான்..!
மரங்களுக்கெல்லாம்
அரசி நீ எனில்...
மண்ணுக்கெல்லாம்
அரசன் நான்..!
பூந்தோட்டத்திற்கெல்லாம்
அரசி நீ எனில்...
தென்றலுக்கெல்லாம்
அரசன் நான்..!
கடலுக்கெல்லாம்
அரசி நீ எனில்...
மழைக்கெல்லாம்
அரசன் நான்..!
கவிதைக்கெல்லாம்
அரசி நீ எனில்...
கவிஞர்களுக்கெல்லாம்
அரசன் நான்..!
காதலுக்கெல்லாம்
அரசி நீ எனில்...
உன் காதலுக்கெல்லாம்
அரசனல்ல, அடிமை நான்..!

12 comments:

  1. வழக்கம் போல கவிதை அருமை.
    நான் ஓட்டு போட்டுட்டேன்..

    ReplyDelete
  2. வாங்க தோழரே...

    கவிதையினை பாராட்டியமைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. //கடலுக்கெல்லாம்
    அரசி நீ எனில்...
    மழைக்கெல்லாம்...//

    அரசன் நான் விட்டுட்டியே நண்பா...
    நல்லாயிருக்கு....
    ஆமா யாருப்பா அந்த அரசி... (அண்ணியின்னு சொல்லி ஜகா வாங்கப்படாது...ஹி.. ஹி...)

    ReplyDelete
  4. வா நண்பா...

    பார்த்தேன்... மாற்றி விட்டேன்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    அண்ணியுமவளே... என் காதலின் பண்ணும் அவளே... ஹி... ஹி...

    ReplyDelete
  5. நிறைய எழுதியிருக்கீங்க போல? வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. வாங்க சமுத்திரா அவர்களே...

    எதோ எனக்கு தோணியதை கிறுக்கியிருக்கிறேன்... நுண்மான் நுழைபுழம் மிக்க உங்களைப் போன்றவர்களுக்கு இதெல்லாம் சாதரணம்தானே...

    வந்து வாசித்தமைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. Kavidaiyin kalanjiyame!
    Kannadasan varise!
    Ungal Kavidaikal anaithum
    Kaviyangala!!

    illai, illai
    Ungal kaigal
    varaintha Oviyangala?

    Jothi

    ReplyDelete
  8. அன்பான தோழிக்கு...

    கண்ணதாசனின் கவி உலக வாரிசு என்ற இடம் மிகவும் உயரிய இடம் தோழி...

    நான் மிகவும் சிறியவன்..!

    என்னை விடச் சிறந்தவர்கள் உள்ளனர்... இவர்கள் முன் நான் சிறு பிள்ளை...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  9. Arasa ennum evlo than erukku eangala-la padikka koda mudiyala neenga eppadi than yosichu eluthi rengalo very very nice ma

    ennum neraiya kavithai eangalukkaga tharanum neenga ok thanks ma bye tack care........

    ReplyDelete
  10. காதலினால் உள்ளத்தில் உவகை கொள்ளும் போது கவிதை தோன்றும்.. அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது...

    நான் காதலை மட்டுமல்லை கவிதையையும் சுவாசிப்பதால் இங்கே என்னால் எழுதமுடிகிறது... அவ்வளவே...

    இவ்வுலகில் இருக்கும் வரை எழுதிக் கொண்டேதான் இருப்பேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  11. அரசி நீ எனில்..!


    பூவிற்க்கெல்லாம்
    அரசி நீ எனில்...
    வண்டிற்கெல்லாம்
    அரசன் நான்..!
    மரங்களுக்கெல்லாம்
    அரசி நீ எனில்...
    மண்ணுக்கெல்லாம்
    அரசன் நான்..!
    பூந்தோட்டத்திற்கெல்லாம்
    அரசி நீ எனில்...
    தென்றலுக்கெல்லாம்
    அரசன் நான்..!
    கடலுக்கெல்லாம்
    அரசி நீ எனில்...
    மழைக்கெல்லாம்
    அரசன் நான்..!
    கவிதைக்கெல்லாம்
    அரசி நீ எனில்...
    கவிஞர்களுக்கெல்லாம்
    அரசன் நான்..!
    காதலுக்கெல்லாம்
    அரசி நீ எனில்...
    உன் காதலுக்கெல்லாம்
    அரசனல்ல, அடிமை நான்..!

    ReplyDelete
  12. இப்படி செய்தால் நான் என்ன சொல்வது தோழரே

    வருகைக்கும் மிக்க நன்றி தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...