Friday, January 14, 2011
தையலெனும் தைமகள் வருகிறாள்..!
மதி நிறை மார்கழித் திங்கள்
மறையத் துவங்க...
தையலெனும் தைமகள்
தலை நிமிர்ந்து வருகிறாள்...
தமிழர்களின் உளம் மகிழ வருகிறாள்...
தமிழர்த் திருநாள் போற்ற வருகிறாள்..!
வரவேண்டும்...
வர(ம்)வேண்டும் தமிழ்ப்பெண்ணே
உமை வேண்டி பாடுகிறேன்
தமிழ்ப்பண்ணே..!
நூறு கிலோ அரிசி மூட்டையைச்
சுமப்பவனால்
நல்ல அரிசி ஒரு கிலோ
வாங்கிச் சாப்பிட வழியில்லை..!
ஒரு கிலோ நல்லரிசி வாங்கி
உண்பவனால்
நூறு கிலோ அரிசி மூட்டையைச்
சுமக்க வக்கில்லை..!
பட்டாடை நெய்கின்ற நெசவாளரால்
சிறுபட்டாடை வாங்கியணிய வசதியில்லை
பட்டு வாங்கும் பணக்காரர்களுக்கு
நெசவாளர் நலனறியப் போவதில்லை..!
போதுமிந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்
எல்லோரும் எல்லாமும் பெற
வறியோர்கள் உடையோர்கள் எனும்
ஏற்றத் தாழ்வு மறைய...
தமிழான தைமகளே தயை புரி..!
ஈழத்து மண்ணில் எம்மக்கள்
இருக்கின்ற இரும்புச்சிறையினை
இருக்குமிடமில்லாமல் செய்..!
உலகத்து தமிழரெல்லாம்
ஒன்றுபட்டு நிற்கும் நிலையினை
இப்புவிதனில் மலரச் செய்..!
அனைவரின் நெஞ்சிலும்
அன்பை விதைத்து...
தீவிரவாதத்தை தீயிட்டழித்து
உயிர் வதையினை உருத்தெரியமலழித்து
உலகெங்கும் அமைதியை பரவச் செய்..!
வியர்வையை உடலில் வரைபடமாக்கி
உழைக்கின்ற பாட்டாளி வர்க்கமும்
வியர்வையை நிலத்தில் நெல்மணியாக்கும்
உயர்ந்த என்னுழவர் வர்க்கமும்
வாழ்வாங்கு வாழ தைமகளே வழி செய்..!
(என் அன்பிற்கினிய வாசக நெஞ்சங்களுக்கு, அடியவனின் இனிய திமழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்...
என்றென்றும் அன்பு'டன்'
உங்கள்
மோகனன்)
இனம் மறந்து இயல் மறந்து
ReplyDeleteஇருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..!
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
போகி வாழ்த்துக்கள்
ReplyDeleteKavithai azhagu nanba...
ReplyDeletevazhththukkal.
"நூறு கிலோ தூக்குபவன்
ReplyDeleteஒரு கிலோ வாங்கமுடியாதிருப்பது..."
வித்தியாசமான சிந்தனை'
வாழ்த்துக்கள்.தொடர்ந்து சந்திப்போம்
nice...
ReplyDeletethanks for u...
ReplyDeleteplease send more kavithaigal..!
MIKKA NANDRU.
ReplyDeleteBALAMURUGAN.B
வாழ்த்திய தொப்பி அவர்களுக்கு எனது நன்றிகள்...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாழ்த்திய அன்பு குமார் அவர்களுக்கு எனது நன்றிகள்...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வித்தியாசமான சிந்தனையை வித்தியாசமாக பாராட்டிய ரமணி அவர்களுக்கு எனது நன்றிகள்..!
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க சொக்கலிங்கம்...
ReplyDeleteவாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க சாலமன்...
ReplyDeleteவாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க பாலமுருகன்...
ReplyDeleteநன்று சொல்லி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!