Wednesday, February 16, 2011

எனை நீ அசத்துகிறாய்..!


'நீயறியாமல் என்னுள்
ஓரணுவும் அசையாது அன்பே'
என்றேன்..!
'என் அணுவே நீதானடா...
நான் உன்னால்தான் அசைகிறேன்..!'
என்கிறாய்..!
கதை சொல்லி உனை நான்
அசத்தலாம் என நினைத்தால்
கவிதை சொல்லி எனை நீ அசத்துகிறாய்..!
ம்ம்ம்... 'நீ பெண் கவிதை'
இல்லை இல்லை...
'நீ என் கவிதை' என்றால் சும்மாவா..?

12 comments:

  1. இந்தக் கவிதை மனசை ஏதோ செய்யுது சார்..

    பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!

    ReplyDelete
  2. அப்படியா தோழரே...

    பாத்துங்க.. மனசு திருடு போனதாலத்தான் நான் இப்படி ஆகி கிடக்கிறேன்....

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. ம்ம்ம்... 'நீ பெண் கவிதை'\\\\\\\
    மோகனன்! கவிதையில் ஆண்கவிதை,
    பெண்கவிதை என்று உண்டா?

    என்ன நடந்தது?
    எம் ஜி ஆர் பாணியில்...
    காற்று வாங்கப் போனேன் ஒரு
    கவிதை வாங்கி வந்தேன்......என

    என் கவிதை,கவிதையென்று
    கவி தைக்கிறீர்கள்!!

    ReplyDelete
  4. குறும்புக்கார கலாவாச்சே நீங்க...

    கண்டீப்பாக ஆண் கவிதை, பெண் கவிதை என தனித் தனியே உள்ளது கலா...

    கதைப்பது என் வேலைதான்... அதை ரசிப்பது உங்களைப் போன்ற கவிதைகளின் வேலை..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. கண்டீப்பாக ஆண் கவிதை, பெண்
    கவிதை என தனித் தனியே
    உள்ளது கலா...\\\\

    ஆண் எழுதினாலும் கவிதைதான்.
    {அவர்: எழுதியவரை கவிஞர் என்பர்}

    பெண் எழுதினாலும் கவிதைதான்
    {அவர்: எழுதியவர் கவிதாயினி,கவிஞர்
    என்பர்}

    இல்லாவிட்டால்..ஆணைப்பற்றி எழுதிருப்பார்
    இல்லாவிட்டால் பெண்ணைப்பற்றி எழுதிருப்பார்

    இது ஆண்{பால்}கவிதையென்றும்
    இதுபெண்{பால்} கவிதையென்றும்
    நான் கேள்விப்படவில்லையே மோகனன்






    அது என்ன ஆண்கவிதை பெண்கவிதை??



    பெண்களைக் கவிஞர்கள் கவிதையென்கிறார்கள்..
    ஆண்களையுமா? இல்லையே!

    ReplyDelete
  6. வாங்க(லா)

    விளக்கம் கேட்டிருக்கிறீர்கள்.. விளக்காவிட்டால் என் விலாவை விலக்கினாலும் விலக்கி விடுவீர்கள்...

    விலாவரியாக விவரிக்கிறேன்...

    பெண் ஆணைப் பற்றி எழுதினால் அது பெண் கவிதை... (பெண்ணின் மன உணர்வுகளைக் காட்டுவது...)

    ஆண் பெண்ணைப் பற்றி எழுதினால் அது ஆண் கவிதை.. (ஆணின் மன உணர்வுகளைக் காட்டுவது..)

    விளக்கம் போதுமா கலா..!

    ReplyDelete
  7. very supper poem...

    Congralation...

    Thevarupan

    ReplyDelete
  8. ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி தேவரூபன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  9. Unga kavidai romba miga arumai

    athu yarukkaga eluthapattathu enru
    sollamudiyuma? plz..!

    Jothi

    ReplyDelete
  10. ரசித்தமைக்கு மிக்க நன்றி...

    ம்ம்ம்... அது ரகசியம்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  11. yen kavithy nee
    thoduthu anivatharku uriya
    manam veesum mallargalala.
    kagithathail mattumay
    malarak kudiya
    magarantha mottugal.

    ReplyDelete
  12. நன்றி விஜி...

    காகிதத்தில் மகரந்தமாய் நானிருப்பேன்.. நீங்கள் படிக்கும் போதுதான் அது கருவுறுகிறது.. கவிதையாய்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...