Monday, March 7, 2011

எது எனக்குப் போதும்..?



தென்றல் வேண்டுமெனில்
உன் மூச்செனக்குப் போதும்..!
திங்கள் வேண்டுமெனில்
உன் சிரிப்பெனக்குப் போதும்..!
நிலவு வேண்டுமெனில்
உன் முகமெனக்குப் போதும்..!
கார்மேகம் வேண்டுமெனில்
உன் கூந்தலெனக்குப் போதும்..!
காந்தம் வேண்டுமெனில்
உன் கண்களெனக்குப் போதும்..!
வசந்தம் வேண்டுமெனில்
உன் வருகை எனக்குப் போதும்..!
வாழ்க்கை வேண்டுமெனில்
உன் காதல் எனக்குப் போதும்..!

14 comments:

  1. வாழ்க்கை வேண்டுமெனில்
    உன் காதல் எனக்குப் போதும்..!\\\\\\

    வாழ்க்கை கிடைத்ததுக்கப்புறமுமா!?

    மனையாள் நினைப்பார் நம்ம மணாளன்
    வேலைக்குப் போய் வருகிறாரென....
    ஆனால் ......
    காதல் மோகன வலையில் இந்த
    மோகனன் மாட்டிக்கிடப்பதை
    ஏன்! இன்னும் அவர்கள் உணரவில்லை?

    காதல் என்றால் அவர்களுக்கு என்னவென்று
    புரியவில்லை போலும்,ம்ம்ம்ம....அதுவரைக்கும்
    நீங்கள் காதல் பண்ணுங்கள்

    {நான் உங்களைக் காட்டியே கொடுக்கமாட்டேன்
    என்னிடம் அவர்கள் காதல் என்றால் என்னவென்று
    கேட்டால் ?என்ன பதில் சொல்ல.....
    ஏதோ மூன்றெழுத்து மந்திரமாம் எனக்கும்
    அவ்வளவாகத் தெரியாதென
    ம்ம்ம்ம...நானே சமாளிக்கின்றேன்

    ReplyDelete
  2. ஐயா! காதலிக்கும் வரைதான் இந்தப்
    போதும்,போதும் வாக்கியம் வரும்
    {இதைத்தான் காதல்படுத்தும்பாடு என்பார்களோ!}
    வாழ்க்கைப்பட்டால்! எல்லாம் பட்டுப்போய்
    பட்டுப்பட்டென சொல்லம்புடன் வாக்கியம்
    வெளியாகப்
    பாக்கியவதி வெலவெலத்துப் போவார்

    கவிதை{க்கு} ரொம்பக் குளிருது மோகனன்!

    ReplyDelete
  3. அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
  4. nan vazha vendumenil
    un anbum neeyum yeanaku vendum
    ippiraviyil...............

    ReplyDelete
  5. வாங்க கலா...

    காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருப்பவர்கள் இந்த உலகத்தில் யாருமில்லை...

    உங்க தாராள மனதிற்கு நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. சொல்லம்பு வீசிப் பழக்கமில்லை...

    //கவிதை{க்கு} ரொம்பக் குளிருது மோகனன்!//

    குளிருகிறதா கலா... இருங்க போர்வை அனுப்புகிறேன்...

    ReplyDelete
  7. நன்றி ராஜராஜன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  8. என் அன்போடு நானும் உங்களுக்காக எப்போதும் காத்திருந்'தேன்'... காத்திருக்கிறேன்... காத்திருப்பேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  9. ரசித்தமைக்கு நன்றி சுகுணா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  10. நன்றி செல்வமணி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  11. Kaatchi (view) vendum enil
    athu un kavithayai
    vasaikka mattum vendum...
    (summa sonnen)

    Kavidai very super...


    Jothi

    ReplyDelete
  12. வாங்க ஜோதி...

    சும்மா எல்லாம் சொல்ல வேணாம்... உண்மைய மட்டும் சொல்லுங்க...

    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...