Friday, March 11, 2011

பிச்சிப் பூ..!


யார் வரவிற்காக
இப்படி ஒற்றைக் காலில்
தவம் செய்கிறாய்
பிச்சிப் பூவே..!
எங்கோ ஓரிடத்தில்
பிறந்து, வளர்ந்து,
மலர்ந்து நின்றாலும்
என்னவள் கூந்தலில்
பூச்சூடத்தான்
இந்த ஒற்றைக் கால் தவமோ..?

மல்லிகையின் மற்றொரு நகல்
நீ என்கிறார்கள்..?!
நறுமணத்தின் நனி பிறவி
நீ என்கிறார்கள்..?!
உன் மணத்தால் அரவம்
வருமென்கிறார்கள்..?!
அத்துனையும் உண்மையா?
பிச்சிப் பூவே..!

உன்னைப் போல்
என்னவளும்
ஒரு பிச்சிப் பூதான்..!
உன் உடல் நிறம்தான்
என்னவளுக்கும்...
உன் இதழ் நிறம்தான்
என்னவள் இதயத்திற்கும்...
உன் மெல்லுடல் வடிவம்தான்
என்னவள் உடலிற்கும்...
உன் சிரிப்பினைப் போல்தான்
என்னவளின் புன்னகையும்...

உன்னுடைய எல்லா குணங்களிலும்
ஒன்றாய்ப் போகும் என்னவள்
உன்னிடமிருந்து மணத்தில்
மட்டும் வேறுபட்டிருக்கிறாள்..!
உன் மணத்திற்கு அரவம்
வருமென்கிறார்கள்...
என்னவள் மணத்திற்கு
என் அன்பும் அரவணைப்பும் வரும்..!

(எனை நேசிக்கும் இனிய கவிதை ஒன்று 'பிச்சிப் பூ' என்ற தலைப்பில் கவிதை கேட்டது... அதன் பலனாக இக்கவிதைப் புனைவு..!)

8 comments:

  1. மோகனன் அவர்களுக்கு
    என்னை பற்றி எனக்கு
    உணர்த்தியதற்கு நன்றி.
    -picchipoo

    எங்கோ பிறந்தாலும்,
    வளர்ந்தாலும், மலர்ந்தாலும்,
    மடிவதென்னவோஉன்னவளின்
    கூந்தலில் அல்லவா.

    என்வீட்டு பூக்கள் எல்லாம்
    தங்களையும் பிச்சிபூவாக
    மாற்றக் கோருகிறது. என்ன செய்ய?

    உங்கள் கற்பனையும் கவிதையும்
    அருமை நானும் பிச்சிபூவாக மாறிவிடுவேனோ
    என்று பயமாக இருக்கிறது?

    ReplyDelete
  2. அட பிச்சிப்பூ எனக்கு நன்றி சொல்கிறது... ம்ம்ம் அவ்வளவு பாக்கியசாலியா நான்..?

    மடிவதில்லை மலர்ந்து படர்வது மங்கையின் கூந்தலில்... அது பிறப்பெடுத்ததே கூந்தலில் அரங்கேறத்தானே...

    என்னை உங்கள் வீட்டு பிச்சிப் பூவாக்கி விடுங்கள்... நான் தயார்தான்...

    நானிருக்க பயமெதற்கு..?

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. அழைப்பிற்கு நன்றி தோழா...

    எனக்கு உடல் நலமில்லை.... இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகு வந்துவிடுகிறேன்...

    ReplyDelete
  4. ரசித்தமைக்கு மிக்க நன்றி..

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. Super iruku nanba, ungalin udal nilai sariyaga nan Eraivanidam vedikolkeren.

    ReplyDelete
  6. நன்றி தோழரே...

    கடவுள் இல்லை என்பவன் நான்... நல்லிதயங்களின் நினைப்பே எனை வாழ வைக்கும்...

    நலமாகிக் கொண்டே இருக்கிறேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. அழகியல்

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...