அனிச்சம் பூ மோதியதா..?
அழகான அன்னமெனை மோதியதா..?
மகிழம் பூ மோதியதா..?
அழகான மயிலிறகெனை மோதியதா..?
முல்லைப் பூ மோதியதா..?
அழகான முயலெனை மோதியதா..?
தாழம்பூ மோதியதா..?
அழகான தங்கரதமெனை மோதியதா..?
குவளைப் பூ மோதியதா..?
அழகான குழந்தையெனை மோதியதா..?
ஆம்பல் பூ மோதியதா..?
அழகான ஆடல்மயிலெனை மோதியதா..?
செங்காந்தள் பூ மோதியதா..?
அழகான செந்தமிழெனை மோதியதா..?
வஞ்சிப் பூமோதியதா..?
அழகான வஞ்சியெனை மோதியதா..?
வாகைப் பூ மோதியதா..?
அழகான வானமெனை மோதியதா..?
குறிஞ்சிப் பூ மோதியதா..?
அழகான குலமங்கையெனை மோதியதா..?
என பலவிதமான கேள்விப்
பூங்கணைகள் எனைத் துளைத்தெடுக்க
ஒரு நொடியில் குழம்பிப் போனேன்
உன் மெல்லிய தீண்டலில்..!
ஒரு நொடியில் குழம்பிப் போனேன்
ReplyDeleteஉன் மெல்லிய தீண்டலில்..!\\\\\\
நீங்கள் குழம்பிப் போனதில்தான்
இப்படிப் போய் மோதிஇருக்கிறீர்கள் போலும்...
காயம் ஏதும் வரவில்லையா?
மோதியவர் மன்னிப்புக் கேட்டாரா! இல்லையா?
மோகனன் பார்த்துப்,பார்த்து நடக்கனும்
“பூக்களை”யெல்லாம் மோதாமல், பாவம் மலர்கள்!!
எனக்குப் மிகவும் பிடித்த பறவை நன்றி
மலர்களுடன்...
மோதிமோதிப் பார்த்து வந்த கவிதை
சொல்கிறது வலியில்லை,ஆனால்...
மோகனன் மணத்தில் வலுவிழந்து போனார் என்கிறது
சரியா...??
அனிச்சபூ மகிழம்பூ, முல்லைபூ ,,
ReplyDeleteதாழம்பூ,குவளை பூ, ஆம்பல் பூ,
செங்காந்தள் பூ, வஞ்சி பூ வாகை பூ,
குறிஞ்சி பூ என இத்தனை பூக்கள் மோதியதா?
நானும் குழம்பித்தான் போனேன்,
உன் மெல்லிய தீண்டலில்...........
மலர்கள் மோதியதால், மனதிலும், மணத்திலும்
வலுபெற்றதற்கு சந்தோசம்.
அருமையான கவிதை
Rompa Nalla Mohanan Sir, Kulampi ponalum Theliva than eluthirukenga.
ReplyDeleteArumaiyana varikal.......
By Bhuvana.
வாங்க கலா...
ReplyDeleteகுழம்பித்தான் போனேன் என்றேன்... வலுவிழந்து போய்விடவில்லை...
மலர் மோதினால் வாசம் வரும்... இந்த மலர் மோதியதில் வாசத்தோடு நேசமும் பற்றிக் கொண்டது...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க விஜி...
ReplyDeleteகபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் மோதியது...
நான் சின்னஞ்சிறியவன்... என் மேல் மோதிய பூவினை பத்துப் பூக்களில் அடக்க இயலாது... காரணம் அவள் பூக்களுக்கெல்லாம் பெருந்தலைவி...
ரசித்தமைக்கு மிக்க நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
நீங்களாச்சும் நான் தெளிவா இருக்கேன்னு ஒத்துகிட்டீங்களே... எனக்கு அது போதும் புவனா...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Muthalil enakku pidithathu
ReplyDeleteungal thalaippoo
ithanai ariya pookalaiyum parthu vanthathu viyappoo
iruthiyaga vanthathu sirippoo...
mothathil ungal kavidai thithippoo!
Jothi
இதுதான் தமிழ்ப் பூக்களின் சிறப்'பூ'
ReplyDeleteஇதைப் படித்ததும் என்னவள் முகத்தில் மகிழ்ச்சி மத்தாப்'பூ'
ரசித்தமைக்கு மிக்க நன்றி 'ஜோ'ப்பூவே..!