என் ஊனோடும் உயிரோடும்
கலந்திருந்தவளே...
இமைப் பொழுதும்
எனை விட்டு
பிரியாமிலிருப்பேன்
என்றவளே...
சட்டென்று இதழ் திறந்து
பணி நிமித்தமென்றாய்...
கடல் கடந்து போகிறேன் என்றாய்...
நீரின்றி அமையா உலகம் போல
நீயின்றி இவ்வுலகம்
எனக்கமையாதடி...
வானின்றி அமையா நிலவு போல
நீயின்றி என்னுலகம்
இருளாகுமேடி...
உனை விண்ணிலவு என்றேன்
அதனால்தான்
விண்ணில் பறந்து செல்கிறேன்
என்கிறாயோ?
உனை அன்னப் பறவை என்றேன்
அதனால்தான்
அலுமினியப் பறவையில்
பறந்து செல்கிறேன்
என்கிறாயோ?
அல்லியவள் அகமகிழ்வாள்..!
அன்னமுன்னை காணாமல்
அகமுடைந்து போவேனே...
உந்தன் குரல் கேட்காமல்
உருக்குலைந்து போவேனே...
எனை என்ன செய்யப் போகிறாய்...
எனக்கென்ன பதில் சொல்லப் போகிறாய்..?
(இது ஒரு புகைப்படக் கவிதை...)
புகைப்படத்திற்கு ஏற்றார் போல் இருக்கிறது...மிக அழகான கற்பனை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
//என்ன சொய்யப் போகிறாய்...//
இதில் செய்ய என்று இருக்கணும், அவசரத்தில் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்
(இது ஒரு புகைப்படக் கவிதை...)\\\\\\
ReplyDeleteஆமா,,, இதை நாங்க நம்பனுமாக்கும்!!!
மோகனன், இதெல்லாம் இப்போது ஒரு சூசுப்பி.....
வழியனுப்பி வைத்துவிட்டு
“போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே”
என்று பாடிக் கண்ணைத் துடைத்துவிட்டு உங்க
வேலையைப் பாருங்கப்பு....
ஆமா,,என் காதுக்கு மட்டும் கேட்கக் கூடியமாதிரி
யாரென்று சொல்லப்படாதா!
nee.... nan..... nam
ReplyDeletepirivethu? nila arugilthan......
vaa..... paranthu selluvom.
arumy. niraya yezhuthungal
ragasiyangalai yarukkum sollatheengappu.
ReplyDeleteVery nice, Very nice Picture.....
ReplyDeleteAval antru viragu vettiya antha alagai parthu patchai marangal ellam pattu poyina Eravoda eravaga,
Anal Marunaal avalo varukeral thazhai odikka pavam antha marathirkum puriyavillai avalin manasu..........! How is it. By Bhuvana
வருகைக்கும் வாழ்த்திற்கும், எழுத்துப் பிழையை சுட்டியமைக்கும் மிக்க நன்றி கவுசல்யா...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க கலா...
ReplyDeleteநான் எதை சொன்னால் நீங்கள் நம்புவீர்கள்..?
உங்களிடம் சொன்னால் அது ரகசியமாயிருக்காது..?
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி விஜி...
ReplyDeleteகண்டீப்பாக எழுதுகிறேன்..!
யாரிடமும் சொல்லாம இருந்தால்தான் அது ரகசியம் விஜி...
ReplyDeleteவாங்க நடராஜன்/புவனா...
ReplyDeleteநல்லா இருக்கு நீங்க எழுதியது...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
உங்களிடம் சொன்னால் அது ரகசியமாயிருக்காது..?\\\\\
ReplyDeleteஅந்தளவு வா யா? டியா? நான்!
ரொம்பச் சாது பாவமில்ல,,..நான்!
இப்படியொரு பட்டம் கொடுக்கலாமா?
SUPER MOGANAN...
ReplyDeleteநான் எங்கே பட்டம் கொடுத்தேன்...
ReplyDeleteநீங்களே சொல்லிக் கொண்டால் நானதற்கு எப்படி பொறுப்பாவேன்...
கலா... வேண்டாம் கலாட்டா...
ரசித்தமைக்கு நன்றி ஜோதி...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் நண்பரே...! Bhuvana
ReplyDeletebhuvinatu88@gmail.com
நன்றி தோழரே...
ReplyDeleteஉடல் நலம் சரியானதும் எழுத வருகிறேன்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!