இப்பூவுலகில் பூக்கும்
பூக்களெல்லாம்
ஒருநாளில் வாடிவிடும்..!
ஆனால் ‘நட்பு’ எனும் பூ
என்றென்றும் வாடாமல் வாசம் தரும்
என்பதை எனக்கு உணர்த்திய
உன்னத நண்பன் நீ..!
நான் வேலை தேடியலைந்த போதெல்லாம்
என் வேதனையைத் துடைத்து...
நான் நம்பிக்கையிழக்கும் போதெல்லாம்
என்னுள் நம்பிக்கையை அடைத்து...
பாழும் நகரத்தில் பரிதவித்து நின்ற போதெல்லாம்
பதறாதே நானிருக்கிறேன் என்று
பரிவோடு நம்பிக்கை மொழி நவின்றவின் நீ..!
என் சுமையினை சுமப்பதற்கு
உன்னிரு தோள்களைக் கொடுத்து...
அடியற்ற மரம் போல
அதலத்தில் வீழும் போதெல்லாம்
பிரதிபலன் பாராமல்
விழுதாய் தாங்கிப் பிடித்தவன் நீ..!
‘இடுக்கண் களைவதாம் நட்பு’
என்ற வள்ளுவனின் வாக்கிற்கு
இலக்கணம் கற்பித்து
என்னுடைய கர்ணன் என
கனிவாய் நிரூபித்தவன் நீ..!
துன்பநிலை வருகையில்தான்
தூய நட்பு வெளியில் வரும்
என்பதை அறியச் செய்த
அன்பு நிறை நண்பா...
இன்றுனக்கு பிறந்த நாள்..!
இனிமை பொங்கும் வளநாள்...
உனைப் பெற்றதால்
உன் பெற்றோர்க்கு மட்டுமல்ல
உனை நண்பனாகப்
பெற்ற எனக்கும் பெருமகிழ்ச்சியே...
எந்நாளும் உனைத் தேடி
வசந்தங்கள் வந்து விழ...
மகிழ்ச்சிக் கடலலை உன்
வாழ்வில் பொங்கியெழ...
என்றென்றும் வாழ்க நீ நட்பே...
பல்லாண்டு... பல்லாண்டு...
பல்லாயிரத்தாண்டு வாழ்கவே..!
(என் இனிய நண்பன் அ. பிரேம் சந்திரனுக்கு இன்று பிறந்த நாள்... அவனுக்காக நானெழுதிய பிறந்த நாள் கவிதை..!)
natpooku illakanamvagutha neeveer iruvarum vazhga. yeapadipa ungalala mattum ippadi ithayathy urrukka mudiyuthu...... nice
ReplyDeleteநட்பின் மகத்துவம் அப்படி விஜி...
ReplyDeleteரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வரிகள் அனைத்தும் நட்பை உணர்ந்து கவிதையாய் வரைந்து இருக்கிங்க அருமை...
ReplyDeleteWow! Ganesan. I liked it. Prem must be feeling great after reading your birthday present.
ReplyDeleteசிலர் இதயங்களில்,......
ReplyDeleteநீங்கள் சொன்ன அனைத்தும்
அடைங்கிருப்பது உண்மையே!
அதில் உங்கள் தோழரும்
அடக்கம்.
நானும் அந்த நல்இதயத்துக்காக...
வளமுடனும் ,வனப்புடனும் வாழ
வணங்குகிறேன் இறையை.
ஆமா,,மோகனன் பெயர் இல்லாத
நண்பரா! பெயரைக்கொடுத்திருந்தால்
பெயர் அறிந்திருக்கலாமல்லவா!!
அன்பான சிநேகிதிக்கு...
ReplyDeleteநட்பின் அருமையை எளிதில் அடக்கி விட முடியாது...
நான் எழுதியது கடுகளவு.. எழுதாமல் விட்டதோ கடலளவு...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
அன்பான தோழி அனுவிற்க்கு...
ReplyDeleteவந்து ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...
அவன் நண்பனாக அமைந்ததுதான் எனக்கு கிடைத்தற்கரிய பரிசு...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
அவன் புகழ் விரும்பா புதியவன்..ஆதாலால்தான் பெயரைச் சுட்டவில்லை..
ReplyDeleteஉரிமையோடு வினவியதால் அவனது பெயரை சொல்லிவிட்டேன்..
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி கலா...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வரிகள் அனைத்தும் அருமை...
ReplyDeleteஉண்மைவிரும்பி.
மும்பை
உண்மை விரும்பிக்கு...
ReplyDeleteகவிதையை ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
பிறந்த நாள் காணும் நண்பனுக்கு
ReplyDeleteதாங்கள் கொடுத்துள்ள இந்த பாமாலை மிக அருமை...
நட்பின் இலக்கணத்தை
கவிதையில் காட்டிய மோகனனுக்கு நன்றி!
உங்கள் நண்பருக்கு வாழ்வில் வளம் பெற எனது வாழ்த்துக்கள்
ஜோதி
ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Very Nice lines.....
ReplyDeleteI like this
Ungalin Nanbar pallandu kalam valvil valam para enathu valthukal..
Wish you Happy Birthday my friend (Pream)..
By Bhuvana
என்னோடு சேர்ந்து நண்பனை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி புவனா...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!