Saturday, April 30, 2011

உலகத்தை இயங்க வைக்கும்..! - மே தின சிறப்புக் கவிதை


உடலினை இயந்திரமாக்கி...
உழைப்பினை உரமாக்கி...
உலகத்தை இயங்க வைக்கும்
உன்னத தோழனே...
உன்னுடைய நாளில்
உனை நான் வணங்குகிறேன்..!

உழைக்கும் வர்க்கம்
ஆட்டுமந்தைகளைப் போல்
இருப்பதால்தான்
‘மே’யில்  வருகிறது
உழைப்பாளர் தினம்
என்றான் ஒரு கவிஞன்..!

உண்மை அதுவல்ல தோழா...
உழைப்பதில்
நீ ஒப்பற்ற மழை
‘மே’கம் போன்றவன் என்பதால்தான்
‘மே’ மாதத்தில் இத்தினம்
கொண்டாடப்படுகிறது..!

உலக வரைபடத்தை
உன் வியர்வைக் கோடுகளால்
உடலெங்கும் வரைந்த தோழனே...
உன் உழைப்பால்தான் உலகமே
அன்று வரைபடமானது...
வளமான பூமியானது..!

உழைத்துக் களைத்தறியா
விவசாயத் தோழனே...
உன்னுழைப்பால் உலகமே
பசியாறுகிறது...
உன்னுழைப்பால் உலகமே
ஆடை அணிகிறது...

நீ மட்டும் உழைப்பாளியல்ல தோழா
உன் குருதியில் இருக்கும்
ஒவ்வொரு வெள்ளை அணுவும் உழைப்பாளியே..!
அவ்வணு உனக்காக உழைக்க...
நீயோ உலகிற்காக உழைக்கிறாய்..!
நீ உழைக்காம்ல் போனால்
உலகமே துன்பத்தில் உழன்றுவிடும்...
உறைந்து போய் நின்று விடும்...

உன்னுழைப்பிற்கு பெயரளவில்
மரியாதை தருவதை விட
பொருளாதார அளவில் என்று
மரியாதை தரப்படுகிறதோ
அன்றுதான் உன் வர்க்கம் உயர்வடையும்..!
என்று உன் வர்க்கம் உயர்வடைகிறதோ
அன்றுதான் உலகில் சமத்துவம் மலரும்..!

(உலகில் ஏதேனும் ஒரு வகையில் உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை உழைப்பாளிகளுக்கும் அடியவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்... பணிவான மே தின வாழ்த்துக்களும் உரித்ததாகட்டும்..!


என்றென்றும் அன்புடன்


உங்கள்
மோகனன்)

19 comments:

  1. //உலக வரைபடத்தை
    உன் வியர்வைக் கோடுகளால்
    உடலெங்கும் வரைந்த தோழனே...///

    ரசித்த யதார்த்தமான வரிகள்...

    ReplyDelete
  2. இனிய ”மே”தின வாழ்த்துகள்

    ReplyDelete
  3. nice quotes.. Do well my dear...

    ReplyDelete
  4. I'm very happy to post your quotes in greateindiaclub website.

    Here the link is..

    https://sites.google.com/site/greateindiaclub/valetinesday/valentine-s-day/mayfirst

    ReplyDelete
  5. ரசித்தமைக்கு மிக்க நன்றி திரு பாரதி அவர்களே..,

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. தங்களுக்கும் மே தின வாழ்த்துக்கள் பாரதி...

    ReplyDelete
  7. வாழ்த்தியமைக்கு நன்றி பூபாலன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  8. நன்றி தோழா... தங்கள் தளத்தில் என் கவிதை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  9. உழைக்கும் வர்க்கம்
    ஆட்டுமந்தைகளைப் போல்
    இருப்பதால்தான்
    ‘மே’யில் உழைப்பாளர் தினம் வருகிறது
    என்றான் ஒரு கவிஞன்..! yar antha கவிஞன் Mohanan sir....?


    ‘மே’கம் போன்றவன் என்பதால்தான்
    ‘மே’ மாதத்தில் இத்தினம்
    கொண்டாடப்படுகிறது..! ethu Entha கவிஞன் unarvu good..

    ungali valthum alavuku nan periyaval illai...

    Valara vendukeren.......


    By Bhuvana

    ReplyDelete
  10. அன்பான புவனாவிற்கு...

    நான் என்னுடைய இளம்பிராயத்தில் படித்த கவிதையைத்தான் இங்கே சுட்டியிருக்கிறேன்.. அந்த கவிஞரின் பெயர் ஞாபகமில்லை. ஆயினும் அந்த வரிகள் என் மனதிலிருந்து மறையவில்லை...

    அடுத்த வரிகளை நான்தான் எழுதினேன்... ஆனால் நான் கவிஞனல்ல... மிகவும் எளியவன் புவனா... கவிஞன் என்பது மிகவும் உயரியது ஆகும்....

    இந்த எளியவன் மேல் கொண்டுள்ள தங்களின் அன்பிற்கு எனது நன்றி....

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    அடிக்கடி

    ReplyDelete
  11. Athenna therumapa oru அடிக்கடி......

    By
    Bhuvana

    ReplyDelete
  12. ஓ அதுவா... தட்டச்சில் தப்பிப் பிழைத்த தனிப்பிழை, அடிப்பிழை அது...

    இருந்தாலும் அதற்கு விளக்கம் தருவது எனது கடமை...

    கேட்பதும், கேளாமல் போவதும் உங்கள் தனியுடமை...

    அடிக்கடி என்றால் ஒவ்வொரு கவி வரிகளின் அடிக்கு அடி ஒரு பொருளிருக்கும், ஆதலால் அடிக்கு அடி இடைவிடாமல் படிக்க வாருங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்...

    கரும்பின் மேல் பாகத்தை கடிப்பதை விட, அடிப்பாகத்தை கடித்தால் அங்கே இனிப்புச் சுவை அதிகமிருக்கும்... அது போன்ற கவிதைகளை சுவைக்க இங்கே வாருங்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்...

    இதில் தாங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்...

    கேள்வி கேட்டமைக்கு நன்றி தோழி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  13. hat's of all workers... super poetry... wish you all the same...

    ReplyDelete
  14. ரசித்து வாழ்த்தியமைக்கு
    மிக்க நன்றி தோழி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  15. மஹராஜாவே வந்து வாழ்த்துகிறாரா..? மகிழ்ச்சிதான்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  16. Arumaiyana vilakkam

    Thanks

    By
    Bhuvana

    ReplyDelete
  17. வினா தொடுத்தது தாங்களாயிற்றே...

    விளக்கம் தரவேண்டியது என் பொறுப்பல்லவா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  18. மிக்க நன்றி

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...