Thursday, April 28, 2011

எம்மீழத்தமிழன் அங்கே தலை தூக்க..! - ஈழத் தமிழ்க் கவிதை!


பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள
ஆஸ்திரேலியாவில் ஓர் இந்தியன்
தாக்கப்பட்டான் என்றதும்
துடிதுடித்து எழுந்த இந்திய அரசு
கைக்கெட்டும் தூரத்தில் உள்ள ஈழத்தில்
எம்மீழத்தமிழன் கொல்லப்பட்டதற்கு
துடித்து எழாமல் தூங்கிப் போனது ஏன்..?

லிபியாவில் கலவரம் என்றதும்
லிகிதம் எழுதாமல்
வானூர்தி அனுப்பிய இந்திய அரசு
எம்மீழத்தமிழன் பிரச்சினையில்
மாற்றி மாற்றி லிகிதம் அனுப்பியது ஏன்?
எகிப்து எரிகிறது என்றதும்
இங்கிருந்து சீறும் ஏவுகணையாய்
செயல்பட்ட இந்திய அரசு
எம் தமிழீழம் பற்றி எரிந்த போது
எதுவும் செய்யாதிருந்தது ஏன்?

இந்திய விடுதலைக்காக
நேதாஜியும், பகத் சிங்கும் செய்தது
விடுதலைப் போராட்டம் என்றால்
எம்மீழத்தமிழன் செய்தது
எந்தப் போராட்டத்தினைச் சாரும்..?
எம்மீழப் புலிகள் செய்தது
விடுதலைப் போராட்டம் இல்லையா?

தமிழன் என்பவன் இந்தியனில்லையா?
தமிழினம் என்பது இந்திய இனமில்லையா?
ஏ இந்திய அரசே...
தொப்புள் கொடி உறவென்று
உனை மனதில் நினைத்த பாவத்திற்கு
எம்மீழத்தமிழன் அங்கே
மண்ணோடு மண்ணாகிப் போனதுதான் மிச்சம்..!

இந்திய அரசே...
அம்மக்கள் எம்மக்களே என்று
அன்று நீ துடித்து எழுந்திருந்தால்
பல்லாயிரக் கணக்கான
ஈழத்தமிழ் மக்கள்
உயிரோடு உலவியிருப்பார்கள்
உற்சாகமாய் சுதந்திரத்தை சுவாசித்திருப்பார்கள்..!

அன்று நீ சாட்டையை சுழற்றியிருந்தால்
சிங்களன் அன்றே சுருண்டிருப்பான்...
இன்று அந்த சாட்டையை
ஐ.நா. சுழற்ற ஆரம்பித்திருக்கிறது...
உதவி செய்ய வேண்டாம் நீ
அதற்கு நீ உபத்திரவம் செய்யாதே...
சிங்களனுக்கு சிகை பல்லக்கு தூக்காதே...
எம்மீழத்தமிழன் அங்கே தலை தூக்க வேண்டும்..!
எம்மீழப் புலிக் கூட்டம் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்..!

(தமிழனாய் பிறந்தமைக்கு தலை நிமிர்ந்து நிற்கவா? இந்தியாவில் பிறந்ததற்கு
தலை குனிந்து நிற்கவா..? - எம்போன்ற உண்மைத் தமிழனின் மனக்குமுறல் என்று அடங்குமெனில் எம்மீழத் தமிழனின் வாழ்வு, அங்கே சுதந்திரமாய் தலை தூக்கும் போதுதான்..! தலை தூக்கும் வரை ஓயமாட்டேன்... யாரையும் ஓய விட மாட்டேன்..!


அடங்கா கோபத்துடன்

உங்கள்

மோகனன்)

17 comments:

  1. நண்பரே ஆஸ்திரேலியாவில் விசா எடுத்து கல்வி கற்க்கும் இந்தியன் தாக்கப்பட்டால், லிபியாவில் விசா எடுத்து வேலை பார்க்கும் இந்தியன் பாதிக்கபட்டால், இந்தியா துடிதுடிக்காமல் வேறு யார் துடிப்பது? இலங்கையில் உள்ளவர்களில் தமிழ் பேசும் இலங்கையரும் இருக்கிறார்கள். அவர்கள் இலங்கையர்கள். ஆங்கிலம் பேசுபவர்கள் இங்கிலாந்தில் மட்டுமல்ல ஆஸ்திரேலியாவிலும் உள்ளார்கள்.

    ReplyDelete
  2. தாங்கள் குறிப்பிட்டதை மறுக்கவில்லை அனானி நண்பரே...

    தமிழினம் வீழ்ந்து போக இந்தியா முக்கியா காரணம் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

    அதுதான் என்னுடைய கேள்வி..?

    ReplyDelete
  3. super sir.........................!

    ReplyDelete
  4. உன்போல் தமிழின பற்று கொண்ட தமிழனை கொண்டதற்கு
    தமிழகம் பெருமைப்பட வேண்டும், அத்தனை தமிழனுக்கும் உன்போல் உணர்ச்சி எழுந்தால் தமிழகம் எங்கோ சென்றுவிடும்....

    மிக அருமை மோகனன்...

    இதைபோன்ற கவிதைகளை படிக்க வைக்கும் உங்களுக்கு நன்றி

    - ஜோதி

    ReplyDelete
  5. நன்றி அருண்...

    ஈழத் தமிழருக்கு விடுவு காலம் பிறந்தால் மகிழ்ச்சிதான்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. அன்பான ஜோதி...

    உங்களின் அன்பிற்கு நன்றி... இது நம் ஒவ்வொரு தமிழினிலும் இருக்கும் உணர்வுதான்.. இதை நான் வெளியே கொட்டியிருக்கிறேன்... நிறைய பேர் உள்ளுக்குள் புகையும் எரிமலையாய் வைத்திருக்கிறார்கள்...

    விரைவில் எரிமலை சிதறும்.. சிங்களர்கள் சிதறுவார்கள்....

    ReplyDelete
  7. அன்று நீ சாட்டையை சுழற்றியிருந்தால்
    சிங்களன் அன்றே சுருண்டிருப்பான்...
    இன்று அந்த சாட்டையை
    ஐ.நா. சுழற்ற ஆரம்பித்திருக்கிறது...
    உதவி செய்ய வேண்டாம் நீ
    அதற்கு நீ உபத்திரவம் செய்யாதே..\\\\\\\

    நண்பரே! உதவியா?உபத்திரமா?எனப்பார்ப்போம்
    இதயமே இல்லாதவர்கள் மத்தியில் ....இதயமுள்ள
    உங்கள் குமுறல்கள்,
    இன்னும் உயிர் ஒட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு
    ஓர் ஆறுதல் மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. அன்பான கலாவிற்கு...

    நம் ஒட்டுமொத்த தமிழர்களின் குமுறல்களை நான் கவிதையாக கொட்டிவிட்டேன்...

    நிறைய பேர் தங்கள் உள்ளத்திலேயே வைத்திருக்கிறார்கள்... விரைவில் எல்லாம் வெளிவரும்... ஈழம் மீளும்...

    அடிக்கடி (சு)வாசிக வாங்க..!

    ReplyDelete
  9. Entha unarvu ella thamilanukum vanthurunthal nam ethanai perai ilantheruka matome Mohanan sir......!


    Kandipakaga namathu unarvugal enravathu oru naal mathikapadum katherupom....!

    Tamilina unarvukalai kavithaikalai koduthamaiku Nanri........

    by
    Bhuvana

    ReplyDelete
  10. அன்பான தோழிக்கு...

    தமிழனின் உணர்வுகளோடு ஒன்றிப் போனமைக்கு நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  11. Nanri thola . ungalin enna unarvuku enathu vanakkangal...

    ReplyDelete
  12. வாங்க தோழரே...

    தங்களின் உணர்வுக்கும் எனது வணக்கங்கள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  13. ungal gopam niyamanathu vaalka tamil!

    ReplyDelete
  14. ஏன் உங்களுக்கு கோபம் வரவில்லையா தோழா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  15. மிக்க நன்றி...

    கண்டீப்பாக பதிவு செய்கிறேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...