Monday, May 23, 2011

நம்பிக்கை அற்று இருப்பவனுக்கு..! - 300வது கவிதைப் பதிவு


நம்பிக்கை அற்று இருப்பவனுக்கு
நம்பிக்கை கொடுப்பதும்
நம்பி 'கை' கொடுப்பதும் நட்பே..!

பசியால் கிடந்து துடிப்பவனுக்கு
அன்னை போல் அமுது கொடுப்பதும்
அன்பைக் கொடுப்பதும் நட்பே..!

தனக்கு சரி சமமான இடத்தை
சபையில் கொடுப்பதும்
சரித்திரத்தில் கொடுப்பதும் நட்பே..!

இக்கட்டான சூழலில் மதி தடுமாறும் போது
மதி மந்திரியாய் செயல்படுவதும்
மந்திராலோசனை சொல்வதும் நட்பே..!

உடன் பிறந்த உறவுகள் கைவிட்டாலும்
உரியவள் கை விட்டாலும்
என்றும் கைதாங்கி நிற்பதென் நட்பே..!

நம் வாழ்வில் திடீரென்று நடக்கின்ற
இன்பத்தில் இணைந்திருப்பதும்
துயரத்தில் துணை நிற்பதும் தூய நட்பே..!

பிரதிபலன் எதிர்பார்க்கும் உறவுகளில்
எதையும் எதிர்பார்க்காமலும்
எதையும் விட்டுத் தரும் உறவே நட்பு..!

சுயநலம் மிக்க உறவுகள் இடையே
நட்பின் நலம் கருதுவதும்
நலிந்தால் நல் உழைப்பைத் தருவதும் நட்பே..!

தம் பெற்றோர் மற்றும் உறவினரிடையே
நமை விட்டுக் கொடுக்காமலிருப்பதும்
நம் நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருப்பதும் நட்பே..!

காதல், அன்பு, பாசம் ஆகிய மூன்றெழுத்து
மந்திரங்களின் மொத்த உருவமாக இருப்பதும்
மனத்துயர்களை நீக்குவதும் நட்பே..!

உயிரெடுக்கும் எமனே வரினும் அவனை எதிர் கொள்ள
என்னோடு தன்னிரு தோள் தட்டி நிற்பதும்
நான் துவளுகையில் தோள் தாங்கி நிற்பதும் நட்பே..!

(இன்னும் எத்தனையோ எந்நட்பில் இருக்கின்றன. இக்கவிதைப் படையலை என் அன்புக்குரிய நண்பர்கள் அனைவருக்கும், உலகத்திலுள்ள அத்தனை நண்பர்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்.


நட்பு மட்டும் என் வாழ்வில் இல்லையென்றால், என்றோ நான் வீழ்ந்திருப்பேன்... நான் வளர வேண்டும் என்று துடிக்கின்ற நட்புகளால்தான், நான் இங்கே துடிப்புடன் வளர்ந்து கொண்டிருக்கிறேன்.


இந்த 300-வது பதிவு வரை எனக்கு ஆதரவு தரும் என்னன்பு வாசக நண்பர்களுக்கு இந்நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...!


என்றென்றும் அன்புடன்


உங்கள் மோகனன்)
------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 2)

22 comments:

  1. நட்பை பற்றின அருமையான விமர்ச்சன வரிகள் மிகவும் அருமை ..

    நட்பின் மகத்துவத்தை எடுத்துரைத்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. நட்பு

    உன் நட்பென்னும் தேனை சுவைக்க
    அன்பென்னும் பூந்தோட்டம் அமைத்து
    அறிவென்னும் தேனியை தூதுவிட்டு
    மனமென்னும் தேன் கூட்டில் சேகரித்தேன்
    கூட்டிலே .......
    தேன் நிறைந்து வழிந்தது
    அதைக் கண்டு என் மனம் மகிழ்ந்தது
    தேனை
    இரசிப்பதா.......? சுவைப்பவதா ......? யோசிபதற்குள் எங்கே .....
    அமாவாசை வந்துவிடுமோ என்று
    என் மனம் அஞ்சுகிறது .


    நாங்களும் எழுதுவோம்ல....

    இது எப்படி இருக்கு....?

    ReplyDelete
  3. கவிதையினை ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. அட்டகாசமா எழுதறீங்க...

    நீங்களும் ஒரு தனி வலைதளத்தைஆரம்பீங்க... அசத்துங்கு.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. ரசித்தமைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. நான் தமிழ்ல என்ன எழுதினாலும் நீ படிக்கிற உன் நல்ல மனசுக்கு பேரனோட பேரன் கூட கிரிக்கெட் விளையாடுவ .........!

    By
    Bhuvana

    ReplyDelete
  7. வாழ்த்தியமைக்கு நன்றி புவனா...

    பந்து பொறுக்கி போட நீங்கதான வருவீங்க..?

    ReplyDelete
  8. Great thought about friendship.Thanks.

    ReplyDelete
  9. வருகைக்கும், ரசித்தமைக்கும் நன்றிகள் பல வினோத்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  10. நன்றி வேண்டி ...நா{ந}டுவதல்ல நட் பூ
    பாசத்தில் நுழைந்து
    புரிதலைஉணர்ந்து
    மனத்தோட்டத்தில்
    பூத்துக் குலுங்குவதுதான்
    மணமுள்ள நட் பூ


    நட்புக்கு நன்றியா?
    நன்றிக்கு நட்பா??

    அமுதமொழி,அழகுநடை
    அள்ளக் குறையா
    தேன்தமிழ்
    அட்சயபாத்திரம்போல்
    காணட்டும் பல..பல..நூறூகள்.
    வாழ்த்துகள்

    ReplyDelete
  11. அன்பு நிறை தோழி கலாவிற்கு...

    நட்பிற்கு பெருமை சேர்க்கும் வலைத்தளத்தில்... வந்து எனை வாழ்த்தியமைக்கு இனிய நன்றிகள்...

    முன்னூறாவது பதிவுக்கு உங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் வரவேற்பும், வாழ்த்துமே காரணம்...

    தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது நன்றி கலா..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  12. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  13. Super..Nanba .... kalakkitteenga...

    ReplyDelete
  14. ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழா...

    தொடரும் உமது ஆதரவிற்கு எனது நன்றி..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  15. unga kavithai nalla iruku.

    ana elorukum ungaluku kedhaitha nanabrgal pola amaivathelai.

    ungaluku kedaithu irupathel santhosam

    Tamil Selvan.S.

    ReplyDelete
  16. உண்மைதான் தோழா...

    சிலர் நண்பர்களாக இருப்பினும் பெயரளவிற்கு பழகிவிட்டு, ஒதுங்கி விடுவார்கள்...

    நல்லவர்களை தேடிப் பிடிப்பது சிரமம்தான்... ஆயினும் நட்பில்லையேல் நானில்லை... நீங்களுமில்லை...

    தொடரும் உமது ஆதரவிற்கு எனது நன்றிகள்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  17. நட்பின் உருவத்தை
    கவிச் சொற்களால் வடிவமைத்த
    நண்பர் மோகனனுக்கும்,

    300வது கவிதையை
    உலகின் அனைத்து சொந்தங்களைவிடவும்
    உயர்ந்த சொந்தமான நட்பை கொண்டு எழுதிய என் நண்பர் கவிதை புயல் மோகனனுக்கும் வாழ்த்துக்கள்...

    தங்களின் 3000மாவது கவிதையை விரைவில் படிக்க ஆசை மோகனன்..!

    ReplyDelete
  18. கவிதையை ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஜோதி...

    அதற்காக என்னை கவிதைப்புயல் என்றெல்லாம் சொல்ல வேண்டாம். இப்படி எல்லாம் பொய் சொன்னால் எனக்கு அப்புறம் எழுத வராது...

    தங்களின் மேலான அன்பிற்கு நன்றி... 3000 மட்டும் போதுமா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  19. ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழா...

    தொடரும் உங்களுது ஆதரவிற்கு எனது நன்றிகள்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...