Wednesday, May 25, 2011

வெகு சீக்கிரத்தில்..!



நீ எனைப் பிரிந்து இருக்கும்
நாட்களில் எல்லாம்
வெகு சீக்கிரத்தில்
தூங்கப் போய்விடுகிறேன்..!
ஏனெனில்...
கனவினில் உன்னோடு
சேர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக..!

(உங்களுக்கு காதலி மட்டும் இருந்தால் இக்கவிதை பொருந்தும்...)
-----------------------------------------------------------------------------------------------------
(உங்கள் காதலிக்கு, ஒரு தங்கையும் இருந்தால் கீழே வரும் கவிதை பொருந்தும்...)

நீ எனைப் பிரிந்து இருக்கும்
நாட்களில் எல்லாம்
வெகு சீக்கிரத்தில் 
தூங்கப் போய்விடுகிறேன்..!
ஏனெனில்...
கனவினில் உன்னோடு
சேர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக..!
ஆனாலெனை அங்கும் வந்து
இம்சிக்கிறாள்
உன்னழகுத் தங்கை..!
அவளை நான் என்ன செய்ய..?

(ஐயோ... அடிக்காதீங்க.... அடிக்காதீங்க..!)


(பின்குறிப்பு: உங்கள் காதலிக்கு அழகான தங்கை இல்லையெனில், அவளது தோழியை இங்கே சுட்டலாம்..! உங்கள் காதலிக்கு தங்கையும், தோழியும் இருந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல...!)
--------------------------------------------------------------------------------------------------------

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 2)

12 comments:

  1. ம்...ம்...ம்...ம்

    யார் அந்த காதலின்னு தான் சொல்லமாற்றிங்க ........?

    நீங்க இப்படி பீல் பன்றத பார்த்த கண்டிப்பா உங்க காதலிக்கு ஒரு தங்கை இருப்பாங்கனு நினைகிறேன் சரியா தோழா ....?

    நாங்கலாம் எதுக்கு இருக்கோம்............! சொல்லியிருந்த பேசி முடிச்சிருக்கலாமே ..............


    By
    Bhuvana

    ReplyDelete
  2. என்னுள் நீக்கமற நிறைந்திருப்பவள்தான் என் காதலி... இதைச் சொல்ல எனக்கென்ன பிரச்சினை.. சொல்லிவிட்டேன் போதுமா...

    என்னவளுக்கு அக்காவுமில்லை.. தங்கையுமில்லை.. தோழிகள் கூட கிடையாது...

    நீங்க எதுக்கும் இருக்க வேணாம்... உங்க அக்கறைக்கு நன்றி...

    ரசித்தமைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. யார் அந்த காதலினு சொல்லுங்க நாங்க பெசிமுடிச்சு
    வைக்கிறோம் .........

    ReplyDelete
  4. உங்களின் மேலான அக்கறைக்கு நன்றி...

    ரசித்தமைக்கும் மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. வெகு சீக்கிரத்தில்
    தூங்கப் போய்விடுகிறேன்..!
    ஏனெனில்...
    கனவினில் உன்னோடு
    சேர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக..!\\\\\\
    என்ன!நம்பலாமா?
    வேறுயாரையாவது கனவு காணக்கூட.....
    சீக்கரத்தில் தூங்கலாமல்லவா!





    ஆனாலெனை அங்கும் வந்து
    இம்சிக்கிறாள்
    உன்னழகுத் தங்கை..!
    அவளை நான் என்ன செய்ய..?\\\\\\\\\\\\\\

    பதில்: அவர்களையும் உங்கள் தங்கையாய்
    நினையுங்கள். ஒருபோதும் தகாத எண்ணங்களாலும்,
    செயல்களாலும் நெருங்க மனது வராது.

    ReplyDelete
  6. வாங்க கலா...

    நம்பிக்கைதானே வாழ்க்கை கலா...

    காதலியின் தங்கையை, என் தங்கையாக நினைத்தால், அவள் அக்காவும் எனக்கு சகோதரி ஆகி விடுவாளே...

    (அடிக்காதீங்க... ஐயோ அடிக்காதீங்க...)

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. ஐயோ கண்டிப்பா நீங்க அடி வாங்கிறதில இருந்து தப்பிக்க முடியாது மோகனன்..!

    முதலில் உள்ள கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  8. யாருகிட்ட அடி வாங்கப் போறேங்கறீங்க..?

    ம்ம்.. ரசித்தமைக்கு மிக்க நன்றி..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  9. my loveruku sister and thozhi irukkirargam. so ..............

    ReplyDelete
  10. வாங்க ரவிமுத்து...

    உங்களுக்கு மச்சம்தான்... (ஆனாலும் இப்படி பீலா விடக்கூடாது நீங்க...)

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  11. வாங்க சுகுணா...

    பெண்களிடமிருந்து இக்கவிதைக்கு எதிருப்புகள் வந்தன. இதனை ஆதரித்த உங்களுக்கு நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...