Tuesday, May 10, 2011

சூழ்நிலைக் கைதி?



'உனைப் பார்த்துப் பேசியே
பலநாள் ஆகிறது தேவி...
எனைக் காண 
எப்போது வருவாய் தேவி..?'
என்றேன்..!

அவளோ...
'என் பெற்றோரிருக்கின்றனர்
என் உடன் பிறந்தோரிருக்கின்றனர்
உனை இப்போது காண வருவது
இயலாது கண்ணா...
நான் இங்கு கைதியாக இருக்கிறேன்
சூழ்நிலைக் கைதியாகவும்
இருக்கிறேன்' என்றாள்...

உனக்காகப் பிறந்த எனை
உன் காதலின் கைதியாக்கி விட்டு
நீயோ அங்கே கைதி என்கிறாய்...
இதற்கு நான் யார் மீது குற்றம் சொல்ல..?

6 comments:

  1. சூப்பர் மோகனன் சார்

    எதார்த்தங்களை இமைகளால் பார்ப்பவன் மனிதன்
    இதயத்தால் பார்ப்பவன் கவிஞன்

    As per you

    By

    புவனா

    ReplyDelete
  2. வாங்க கூடல் பாலா...

    என்னங்க செய்யறது... உலகத்துல இன்பத்தை தரும் உணர்வுகளில் முதலிடம் பிடிப்பது காதல்தானே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. அன்பான புவனாவிற்கு...

    தங்களின் மேலான அன்பிற்கு நன்றி... நான் கவிஞனல்ல... உங்களைப் போல நானும் சாதரணமானவன்தான்...

    உங்கள் எல்லோரையும் விட மிகவும் எளியவன் நான்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. yaruppa antha kaithi super sir. miga arumy

    ReplyDelete
  5. நான் தான் அந்த கைதி விஜி...

    ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...